தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 27 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை
வகித்தார். சமூக ஆர்வலர் கே.கே ஹாஜா நஜ்முதீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் மேஜர் எஸ்.பி கணபதி, கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை மை. பரீதா பேகம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை நியூஸ் ஆசிரியர் எம்.நிஜாமுதீன், எம்.எம்.எஸ் ஜவஹர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் வகுப்பளவில் முதல் தரம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்று பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் மதுக்கூரில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பள்ளி சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி பள்ளி ஆண்டறிக்கையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை அகிலா நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
hhhhhhh
ReplyDelete