அதிராம்பட்டினம், ஏப்-02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் திரைப்பட இயக்குனர் சற்குணம் கலந்துகொண்டார்.
இன்று ஏப்-02 ந் தேதி நாடு முழுவதிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் முதல் சுற்று தவணையும், வருகின்ற ஏப்-30 ந் தேதி இரண்டாம் சுற்று தவணையாகவும் நடைபெறவுள்ளது. இதில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன் படி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரைப்பட இயக்குனர் சற்குணம் கலந்துகொண்டு போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
இம்முகாமில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஏ.அன்பழகன், எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன், சுகாதார அலுவலர் வெங்கடேஷ், செவிலியர் ராஜேஸ்வரி, அதிரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ், முத்துகிருஷ்ணன், நவாஸ்கான், உதயகுமார், முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன், தமிழ் ஆசிரியர் அஜ்முதீன், அகமது மன்சூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.