மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய தொழிற்சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் நீர் மோர் பந்தல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மமக தொழிற்சங்க பிரிவு அதிரை பேரூர் செயலர் ஹக்கீம் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தமுமுக அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுத்தீன் திறந்து வைத்தார். அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமுமுக, மமக அதிரை பேரூர் தலைவர் சாகுல் ஹமீது கூறுகையில்;
'கோடை வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில்,
பொதுமக்கள், பயணிகள் பயன்பெரும் வகையில், மமக தொழிற்சங்க பிரிவு சார்பில், அதிராம்பட்டினத்தில் தக்வா பள்ளிவாசல், அதிரை பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது. கோடை காலம் முடியும் வரை இச்சேவை தொடரும். இன்று திறப்பு விழாவையொட்டி பொதுமக்களுக்கு நன்னாரி சர்பத், மோர், தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. இரண்டு இடங்களிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பயணிகள் பயனடைந்தனர்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலர் அதிரை அகமது ஹாஜா, துணைச்செயலர் செய்யது முகம்மது புஹாரி, மமக துணைச் செயலர் எஸ்.எஸ் சேக்காதி, சிராஜுதீன் உள்ளிட்ட தமுமுக, மமகவினர் கலந்துகொண்டனர்.

















நல்லதிட்டம் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லதிட்டம் வாழ்த்துக்கள்
ReplyDeleteCool cool...ithu namma adirai..
ReplyDelete