லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா தஞ்சையில் அண்மையில் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சஙகம் பரிந்துரையின் பேரில், அதிராம்பட்டினம் பிரபல மருத்துவரும், தஞ்சை கேன்சர் சென்டர்- ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் வீரபாண்டியன் அவர்களால் 'மருத்துவ மாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில், 9 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் ஜலீலா முகம்மது முகைதீன் செயலாளர் சுப்பர் அப்துல் ரஹ்மான் பொருளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது மாவடட ஆளுநர் நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், வட்டாரத்தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவர் அப்துல் ஹக்கீமுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


வாழ்த்துக்கள் டாக்டர் நீங்க நல்ல இருக்கணும்னு வாழ்த்துறேன். காசு பணமே வாழ்கை என்றிர்க்கும் சமுதாயத்தில் சேவை மற்றும் அர்பணிப்பு என்று நீங்கள் ஆற்றி வரும் சேவை இறைவன் உங்களுக்கு இம்மை மறுமை இரண்டையும் வெற்றி அடைய செய்வானாக ஆமீன்
ReplyDelete