அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் செப்டம்பர் மாதத்தின் மாதாந்திர கூட்டம் கடந்த 8/9/2017 வெள்ளியன்று குவைத் சால்மியாவில் இனிதே நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரம் நடந்த மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. ரஹ்மானியா மத்ரஸா மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் பாடத்திட்டம் உருவாக்க பின்வரும் நபர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது:
1. ஜெய்னுல் ஹுசைன்
2. பாவா பஹுரூதீன்
3. நிஜாமுதீன் பாக்கவி
4. முஹம்மது இஸ்மாயில்
5. முஹம்மது இப்ராஹிம்
2. அண்ணதான திட்டம் நடைமுறை படுத்த மேலும் பங்களிப்பு தேவைப்படுகிறது.
பங்களிக்க விரும்புபவர்கள் சகோ ஜெய்னுல் ஹுசைனை +965 99781286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
3. பிலால் நகரில் கழிப்பறை வசதியில்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அதற்கான பங்களிப்பும் தொடங்கியுள்ளது. ஸதகாவிலிருந்தோ, ஜகாத்திலிருந்தோ, வங்கி வட்டியிலிருந்தோ பங்களிக்க விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் குவைத் கிளை


அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் தீர்மானங்கள் குறித்து:
ReplyDelete1. மதரஸா பாடத்திட்டத்தை கணிணிமயப்படுத்துவது வரவேற்கத்தக்கது, மாற்றங்கள் நல்ல விளைவுகளைத் தரட்டும்.
2. அண்ணதான திட்டம்? - அது எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றது என எனக்கு தெரியாததால்
தற்போதைக்கு நோ கமென்ட்ஸ்
3. கக்கூஸ் கட்டித்தருவது நல்லவிஷயம் தான் ஆனால் அதற்கு ஸதகா பணத்தை பயன்படுத்துவதில் தவறில்லை ஆனால் ஜகாத் மற்றும் வட்டிப் பணத்தை கேட்டுள்ளீர்கள்.
ஜகாத் பணத்தை இதுபோன்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்றே கருதுகிறேன்.
வட்டிப் பணத்தை பொருத்தவரை அதை நாம் எந்த நோக்கத்திற்காகவும் வங்கி கணக்கிலிருந்து பெறவேகூடாது என்று மார்க்க அறிஞர் சொல்லுவதையே நானும் சரி காண்கின்றேன்.
இதற்கு மாற்றமாக வங்கி வட்டிப்பணத்தை வாங்கி கக்கூஸ் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லக்கூடிய அறிஞர்களும் உள்ளனர்.
'சந்தேகத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்' என்ற ரஸூல் (ஸல்) அவர்களின் போதனையையே உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக வட்டியிலிருந்து முழுமையாக விலகிக் கொள்ள வேண்டுகிறேன்.
எனது புரிதலில் தவறு இருப்பின் சம்பந்தப்பட்ட சகோதரர்கள் பிறரும் அறிந்து கொள்ளும் வகையில் கண்ணியமான முறையில் பதில் தரவும்.
என்றென்றும் அன்புடன்
அதிரை அமீன்
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّـهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّـهِ ۗ وَاللَّـهُ عَلِيمٌ حَكِيمٌ
Delete( سورة التوبة 60)
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
கழிப்பறைகூட கட்ட வசதி இல்லாதவரை ஏழை என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது?
---------------------------------------------
நம் வங்கி கணக்கில் வந்து விழும் வட்டிப்பணத்தை என்ன செய்வது என்ற கேள்விக்கு மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.
1. வட்டியை தொடாதே! ஏன் வட்டி வாங்கினாய் என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வாய்? - சிலர்
2. வாங்கி வட்டியை எடுத்து நன்மையை எதிர்பாராமல் தர்மம் செய் - வேறு சிலர்
www.islamqa.com தலத்தில் சவூதி மார்க்க அறிஞர்களிடம் கேட்டதில், "வட்டி நஜீஸ். உன் ஆடையில் நஜீஸ் பட்டால் அந்த இடத்தை அப்படியே கழுவி எடுப்பதுபோல், வட்டியை உன் கணக்கிலிருந்து துடைத்து எடுத்துவிடு"