அதிரை நியூஸ்: மே 12
ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும் என்பது பழமொழி ஆனால் அமீரகத்துல நடப்பு சித்திரை மாசத்திலேயே ஒரு இரும்புக் கட்டில் பறந்த சுவராசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
நேற்றைய முன்தினம் அமீரகம் முழுவதும் பலத்த புழுதிக்காற்று வீசியது அறிந்ததே. அதிலும் மலைக்குன்றுகள் அதிகமுள்ள ராஸ் அல் கைமா நகரில் காற்றின் வேகம் கூடியிருந்தது.
இந்தக்காற்றில் அடித்து வரப்பட்ட இரும்புக்கட்டில் ஒன்று எதிஸலாத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களில் சிக்கி தூக்கில் தொங்குவது போல் தொங்கிக் கொண்டிருந்தது. எனினும் அருகிலிருந்தோர் எதிஸலாத் பராமரிப்பு குழுவினர் வருமுன்பாக கட்டிலை கேபிளில் இருந்து அகற்றினர்.
இரும்புக் கட்டில் காற்றில் அடித்து வரப்பட்டு தொங்கியதை காட்டும் இப்படங்கள் மட்டும் கிடைத்திராவிட்டால் இச்சம்பவத்தையே நம்ப ஆளில்லாமல் போயிருக்கும். இந்த லாஜிக் அடிப்படையில், அப்ப நம்ம தமிழ் பழமொழியையும் சரியாத்தான் சொல்லியிருப்பாங்களோ? டவுட்டு!
முகநூலில் படித்த ஒரு ஜோக் ஒன்றை நினைவுகூர்ந்து நிறைவு செய்கிறோம். 'ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும் என்கிற பழமொழியை படித்த ஒருவன், அம்மி பறக்காமல் இருக்க அதன் மேல் பேப்பர் வெயிட் ஒன்றை வைத்தானாம்' எப்புடீ!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.