.

Pages

Sunday, March 2, 2014

இரத்த தானத்தில் சாதனை நிகழ்த்திய 'அதிரை நியூஸ்' பங்களிப்பாளர் அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது !

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் A. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிரை நிருபராகவும், 'அதிரை நியூஸ்' வலைதளத்தின் முதன்மை பங்களிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று 25 வது தடவையாக இரத்தத்தை வழங்கி சாதனை புரிந்துள்ளார். இவர் இதுவரையில் 8 லிட்டர் 750 மில்லி கிராம் இரத்தம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் குருதிகொடையை பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதல் வழங்கி பாராட்டியது, மத்திய இணை அமைச்சர் E. அஹமது MP, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் MP, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

பிறருக்கு முன் மாதிரியாக மேலும் இரத்ததானங்கள் பல செய்து சமூகத்தொண்டை தொடர்ந்து செய்திடவேண்டும் என்ற வேண்டுகோளுடன் 'அதிரை நியூஸ்' சார்பில் A. சாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும் இரத்ததானம் செய்த அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யது அவர்களுக்கும் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 அதிரை நியூஸ் குழு


9 comments:

  1. மாஷா அல்லாஹ் !

    இரத்த தானத்தில் இஸ்லாமியர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிருபித்து உள்ளீர்கள்.

    சமூக சேவையை தொடர்ந்து ஆற்றிட என் வாழ்த்தும் - துஆவும்

    ReplyDelete
  2. தானத்தில் சிறந்தது அன்னதானம் அதிலும் சிறந்தது இந்த ரத்த தானம். அல்லாஹ் நாம் அனைவருக்கும் நோயற்ற வாழ்வை தந்தருள அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் .

    ReplyDelete
  3. சமூக சேவையை தொடர்ந்து ஆற்றிட என் வாழ்த்தும் - துஆவும்

    Reply

    ReplyDelete
  4. உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நபருக்கு இரத்தம் தேவைபட்டால் உடனடியாக இரத்ததானம் செய்விர்களாக. இரத்ததானம் செய்வதால் நமது உடலில் உள்ள பழைய இரத்தம் வெளியேற்றப்பட்டு, புதிய இரத்தம் நமது உடலில் ஊறும். இரத்ததானம் செய்வதால் வாந்தி, மயக்கம், உடல்நல கோளாறு ஆகியவை எற்படும் என்ற தவறான எண்ணம் நமது சமுதாய மக்களிடத்தில் உள்ளதால், இரத்தம் கொடுக்க முன் வரும் நபர்களை கூட இரத்ததானம் செய்யவிடாமல் தடுத்துவிடுகிறார்கள்.
    இரத்ததானம் செய்வதில் A. சாகுல் ஹமீது அவர்கள் ஒரு புரட்சியே ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார். இது வரை 25 தடவை இரத்ததானம் செய்துள்ள அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், தெரிவித்துகொள்கிறேன். அவரது சமுதாய பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
    மேலும் இவரை போன்று மற்றவர்களும் சமூகப்பணியில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவன் நம் யாவருக்கும் உதவி புரிவானாக.

    ReplyDelete
  5. தொடர் ரெத்தம் கொடுத்திடும் உங்களுக்கும், தேவையுடன் பெற்றிடுபவர்களுக்கும் அல்லாஹ் ஆரோக்கியத்தை கொடுப்பானாக! ஆமீன்.

    ReplyDelete
  6. Anakkaha thuva seaitha nal ullagkalukkum cell phone nel vaalththu seaitha adirainews vasaka anparkalukkum nanre. Nanre.
    shahulhameed cell, 9551310938

    ReplyDelete
  7. MASHA ALLAH... SHAHUL HAMEED KAKA ALLAH UNGALUKU BARAKATH SEIVANAHA,UNGALAI POOL SAMOOHA SEVAIYEIL IDUPADA ALLAH ANAIVARUKUM UTHAVI PURIVANAHA AMEEN...

    ReplyDelete
  8. ஒருதடவை பட்டுக்கோட்டையில் அவசர உதவிக்கு சரியாக இரவு 2 மணிக்கு அலைபேசியில் அழைப்பு வந்து உடனே குளிரையும் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனத்தில் பறந்து வந்த அந்த நல உள்ளங்களை பார்த்து அங்குள்ள செவிலியர்களும் ,மருத்துவர்களும் வியப்படைந்தார்கள் இந்த நேரத்திலும் எதையும் எதிர்பாராமல் வந்து உதவிசெய்துல்லீர்கள் அன்றுமுதல் இன்றுவரையிலும் ஜாதி மதம் பேதம் பார்க்காத நமவர்களின் உள்ளங்களை புரிந்த அந்த மக்களும் வியப்படைந்தார்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.