.

Pages

Monday, June 2, 2014

முத்துப்பேட்டையில் மாவட்ட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் எம்.எப்.சி.சி அணி முதல் பரிசு !

முத்துப்பேட்டையில் மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டியில் எம்.எப்.சி.சி அணி முதல் பரிசு பெற்றது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நோபியர் மற்றும் மூன்லைட் கிரிக்கெட் அணிகள் சார்பில் மாவட்ட அளவிலான 10-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மங்களுர் ஈ.சிஆர் சாலை மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை சுற்று புற பகுதி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துக் கொண்டனர். நிறைவு நாளான நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதல்பரிசு பத்தாயிரம் மற்றும் சுழற்கோப்பையை முத்துப்பேட்டை எம்.எப்.சி.சி அணி பெற்றது, இரண்டாம் பரிசு ரூபாய் எட்டாயிரம் மற்றும் கூழற்கோப்பையை நோபியர் அணியும், மூன்றாம் பரிசு ஆறாயிரம் மற்றும் சுழற்கோப்பையை நோபி அணியும், நான்காம் பரிசு நான்காயிரம் மற்றும் சுழற்கோப்பையை பியர்லெஸ் அணியும் பெற்றது. அதன் பிறகு சிறந்த மட்டையாளர், தொடர் ஆட்ட நாயகன், சிறந்த காப்பாளர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த தடுப்பாளர் ஆகியவைக்கான விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, பதக்கங்களும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் துபாய் அமீரக பேரவை தலைவர் நெய்னா முகம்மது, மனித நேய மக்கள் கட்சி மாநில பேச்சாளர்; முகம்மது மாலிக், அமீரக பேரவை பிரிதிநிதி அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து பரிசுகளை வழங்கினார்கள். இதில் பலரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் அணியை சேர்ந்த சாதம் உசேன், அகம்மது நிஜாம், இஜாஸ் அகம்மது, சாலிது அகம்மது ஆகியோர் செய்து இருந்தனர்.

'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.