இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் படிவம் 6 ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வட்டாட்சியர், நகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலோ, மாநகராட்சிக் பகுதிகளில் மண்டல அலுவலகங்களிலோ அளிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பத்துடன் இருப்பிட மற்றும் வயதுச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்பவர்கள் படிவம் 8 ஐயும், பெயர் நீக்கத்துக்கு படிவம் 7 ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை http://www.elections.tn.gov.in/eregistration/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
//பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்பவர்கள் படிவம் 8 ஐயும், பெயர் நீக்கத்துக்கு படிவம் 7 ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.//
ReplyDeleteஇது ஒரு கையாலாகாத Department காரணம் படிவம் 8 யை நான் எனது பெயரில் திருத்தம் குறித்து அவ்வப்போது ஊரில் நான் இருக்கும் காலங்களில் பலமுறை விண்ணபத்தை பூர்த்தி செய்து மாற்றம் செய்ய கொடுத்துள்ளேன் பலனில்லை.இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எனது அயல்நாட்டு வக்கீல்கள் எனக்கு பரிந்துரை செய்துள்ளனர்.பொறுத்திருந்து பார்போம்....