செட்டியார் குளம் சுத்தம் செய்யப்பட்டது சந்தோசமான விசயமே. இருப்பினும் செட்டியார்குளம் கிழக்கு படித்துறை புதுபள்ளிவரை செல்லும் ஒத்தையடி சிமிண்ட் சாலை குளம் சுத்தம் செய்யபட்டபோது கனரக வாகனங்கள் சென்று மிகவும் பழுதாகி உள்ளது.பொதுநலன் கருதி 2007 ல் அங்கு என் சொந்த செலவில் சுமார் 60 அடிக்கு கான்கிரெட் பிளாட் போட்டு அந்த வாய்க்காலை நான் மூடினேன்.
மேலும் அங்கு குப்பைகள் கொட்ட ஒரு சிறிய குப்பைதொட்டி இருந்து வந்தது அது உடைந்துவிட்டதால் அங்குள்ள குப்பைகள் அந்த குறுகிய சிமிண்ட் ரோட்டில் சிதறிக்கிடக்கின்றன. அங்கு ஆடுகளும் ,மாடுகளும் மற்றும் நாய்களும் எப்போதும் நின்றுகொன்று குப்பைகளை கிளறுவதால் அந்த வழியாக KMGH School செல்லும் பள்ளி மாணவியர்களும் பெரியவர்களும் குழைந்தைகளும் பள்ளிக்கு தொழ செல்பவர்களும் அந்த வழியாக செல்ல பயப்படுகின்றனர் காரணம் அந்த குறிகிய வழியில் ஒருபுறம் குளம் மறுபுறம் வாய்க்கால் அங்கு முறையாக ஒரு பெரிய குப்பைதொட்டியை ஏற்படுத்தி குப்பைகள் ரோட்டில் சிதறாமல் உடக்குடன் குப்பைகளை அப்புறபடுத்த ஏற்பாடு செய்யவும் .ஆஸ்பத்திரி தெருவில் இன்றுவரை குப்பைகளை கொட்ட குப்பை தொட்டிகள் கிடையாது அங்குள்ள வசதி படைத்தோர் வேலை ஆட்களை வைத்து அங்குள்ள குப்பைகளை இங்கு நான் மேலே குறிப்பிட்ட பாதையில் கொட்டி செல்கின்றனர் தன்னுடைய வீடுகளை சுத்தமாக வைத்துகொள்ள அடுத்தவர்களின் வீட்டருகில் குப்பைகளை கொட்டும் ஆதிக்க வர்க்கங்களின் பழக்கம் இன்னும் நம் மக்களிடம் மாறவில்லை என்பதும் வேதனைக்குரியது .இதை நான் பலமுறை எடுத்துகூறியுள்ளேன்.
இப்படிக்கு,
அபூபக்கர்.கேன்
ஜப்பான், ஆஸ்திரிலியாவிலிருந்து சொல்வதால என்ன? நடக்கவா போகுது. சும்மா பேருக்காக ஏன்
ReplyDeleteபகிரங்கமாக சொல்லும் ஆர்வத்தை ஊக்குவிப்போம்
Deleteஅபூபக்கர் காக்கா சொல்வது போல் அதிரையில் உள்ள சில் ஏரியாவில் இதுபோன்றது நடந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களிடேயே விழிப்புணர்வு வேண்டும்.
இது குறித்து அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துசெல்ல முயற்சிக்கிறேன்.
மக்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும், ஐபோனில் புகார் செய்தார். அமெரிக்காவிலிருந்து புகார் செய்கிறார் என்று என்ன புண்ணியம்.
Deleteபேருராட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும்போது எந்தவிதித்தில் பொதுமக்களாய் இருந்து ஒத்துழைப்பு வழங்குனீர்கள்
பெயருக்காய் எந்த சேவையும் வேண்டாம்,
மக்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும், ஐபோனில் புகார் செய்தார். அமெரிக்காவிலிருந்து புகார் செய்கிறார் என்று என்ன புண்ணியம்.
Deleteபேருராட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும்போது எந்தவிதித்தில் பொதுமக்களாய் இருந்து ஒத்துழைப்பு வழங்குனீர்கள்
பெயருக்காய் எந்த சேவையும் வேண்டாம்,
Assalamu alaikum....aboobacker nana solradhu ...nam oor makkalin palakam maaravillai...endru kooruvadhu unmaiyana seidhi. Oor nalan karudhi daan. Solgiraagal.....perukaaha epd solla mudiyum... insha allah. Ungalun aasai niraaiverum...
ReplyDelete//ஜப்பான், ஆஸ்திரிலியாவிலிருந்து சொல்வதால என்ன? நடக்கவா போகுது. சும்மா பேருக்காக ஏன்//
ReplyDeleteஎந்த தேவைகளையும் முறையாக அடித்தளத்தில் இருந்து பெற்று கொள்ளவே இந்த முயற்சி மற்றபடி எங்கு அணுகினால் எதை எப்படி பெறமுடியும் என்ற விபரமற்ற மக்களல்ல நாம் ...
Most of them says some thing is better than nothing but we have lots of things to do.............
செய்னா குளம் வேலை அறைகுறை ஊர் மக்கள் என்ன கூக்குரல் கொடுத்தார்கள், ஆடு முட்டி பில்லர் கேட்டுடன் விழுந்தது, அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தான் உண்டு என்று இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது
Deleteபேரூர் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்பதை நாம் காண்கிறோம் இதற்க்கு அதிகாரிகளை குறை சொல்வதா அல்லது நாம் தேர்ந்தெடுத்த கவுன்சிலரை சொல்வதா?
ReplyDeleteஎல்லா வார்டிலும் சமூக ஆர்வலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் இம்மாதிரியான பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண்பார்கள்.
அல்லது நாமே ஒரு அமைப்பு ஏற்படுத்தி தூய்மை செய்ய வேண்டியது தான்.
மர்ஹும் AMS அவர்கள் கூட CAP அமைப்பு ஏற்படுத்தி அதிரைன் குப்பைகளை அல்ல ஏற்பாடு செய்தார் அதற்கும் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்களா? ஏதோ காரணத்திற்காக மூடப்பட்டது.
மக்களிடம் பணம் இருப்பதால் எந்தவகையான நோயாக இருந்தாலும் தன வசதிக்கு ஏற்ப வைத்தியம் பார்த்து விடுகிறார்கள் ஆனால் ஏழைகளின் நிலைமை பரிதாபம்!
நோய்க்கு காரணம் மேற்சொன்ன குப்பைகளே காரணம் என்பதை மக்கள் அறியாமல் இருப்பது ஏனோ?
கப் அடிப்பதை, அதை சுவாசிப்பது நம் மக்களே என்பதை உணரவேண்டும் !
அழகிய முறையில் உணர்த்தினீர்கள், வாழ்த்துக்கள்
Deleteமக்கள் எல்லோரும் அப்படித்தான், வாழ்வும் விட மாட்டாங்க, சாகவும் விட மாட்டாங்க. வாழப்போனா சாக சொல்வாங்க, சாக போனா வாழ சொல்வாங்க.
ReplyDeleteசகோ. அபூ....., அவர்களே, நீங்க தூள் கிளப்புங்க. உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
//பகிரங்கமாக சொல்லும் ஆர்வத்தை ஊக்குவிப்போம்//
ReplyDeleteநிச்சயமாக ........ஊடக துறையில் துடிப்புள்ள தம்பி சேகன்னா M நிஜாம் அவர்களே எனக்கு அதிகம் பிடித்தவை உங்களின் சமூக விழிப்புணர்வு பக்கங்கள்.
//எல்லா வார்டிலும் சமூக ஆர்வலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் இம்மாதிரியான பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண்பார்கள்.//
சகோ .மஸ்தான் கனி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஆட்சியில் இல்லாத ஆளத்தெரிந்த மக்களும் எத்தனையோ பேர்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர் ஆனால் அதை தேவையற்ற ஒன்றாக கருதுவதே அவர்களின் முக்கிய காரணம் .
செய்னா குளம் வேலை அறைகுறை ஊர் மக்கள் என்ன கூக்குரல் கொடுத்தார்கள், ஆடு முட்டி பில்லர் கேட்டுடன் விழுந்தது, அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தான் உண்டு என்று இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது
Delete//சகோ. அபூ....., அவர்களே, நீங்க தூள் கிளப்புங்க. உங்களுக்கு வெற்றி நிச்சயம்.//
ReplyDeleteஞாயிற்று கிழமையிலும் விடுமுறையில்லா கருத்துபணி செய்யும் சகோ .Adirai post man அவர்களே Jasakallaah hyer ...........
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
தம்பி அபூபக்கர் அவர்கள் ஊர் வந்தும் சந்திக்க முடிய வில்லை, இப்படி வார்த்தைகளால் (பாரதிராஜா படம் மாதிரி) சந்தித்து! சந்தித்து!!,
இன்ஷா அல்லாஹ், சந்திக்கக் கூடிய நேரமும் வரணும். தம்பியின் இந்த விண்ணப்பத்தை அதிரை பேரூர்ராட்சி கவனிக்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
//இன்ஷா அல்லாஹ், சந்திக்கக் கூடிய நேரமும் வரணும்.//
ReplyDeleteAameen......
நாம் கற்ற கல்வியை காசுக்காய் விற்பவர்கள் அதிகரிக்கிறார்கள், உங்கள் கூக்குரல் இல்லை ஊர் நேர்மையாளர்கள் கூட தற்போது தொய்வில் இருக்கிறார்கள்
ReplyDeleteசெய்னா குளம் வேலை அறைகுறை ஊர் மக்கள் என்ன கூக்குரல் கொடுத்தார்கள், ஆடு முட்டி பில்லர் கேட்டுடன் விழுந்தது, அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தான் உண்டு என்று இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. செய்னா குளத்தின் நிலைபாடு ஏன் அபூபக்கர்.கேன்-avargaluku தெரியவில்லை
ReplyDelete//செய்னா குளம் வேலை அறைகுறை ஊர் மக்கள் என்ன கூக்குரல் கொடுத்தார்கள், ஆடு முட்டி பில்லர் கேட்டுடன் விழுந்தது, அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தான் உண்டு என்று இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. செய்னா குளத்தின் நிலைபாடு ஏன் அபூபக்கர்.கேன்-avargaluku தெரியவில்லை//
ReplyDeleteசகோ .DIGITECH அவர்களுக்கு கருத்துக்களையும் ஆதங்கங்களையும் மீடியாக்களுக்கு எடுத்துசொல்லும் தாங்கள் முதலில் தங்களுடைய Profile ID யை பிறருக்கு அறியத்தாருங்கள் .செய்நாகுளம் என்பது நமதூரின் பாரம்பரிய குளம் அதன் தற்போதைய நிலைபாடுகளை எனக்கு தெரியபடுத்தவும் களத்தில் இறங்கலாம் . abudpworld@gmail.com
என்னதான் ஓ!ஓ!!வென்று கத்தினாலும் மக்களில் யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். [co=”red”]அப்படிப்பட்ட காலம்[/co]
ReplyDeleteஇந்த செயனாங் குளம் கடந்த சில மாதங்களாக பெரிய சர்ச்சையாக இருக்குது, கீழத்தெரு ஜாமாத்தார்களும் மாவட்ட ஆட்ச்சியரை சந்தித்துவிட்டு வந்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் முடிவு கிடைக்கும்.
நம்பிக்கை உண்டு.
//என்னதான் ஓ!ஓ!!வென்று கத்தினாலும் மக்களில் யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். [co=”red”]அப்படிப்பட்ட காலம்[/co]
ReplyDeleteஇந்த செயனாங் குளம் கடந்த சில மாதங்களாக பெரிய சர்ச்சையாக இருக்குது, கீழத்தெரு ஜாமாத்தார்களும் மாவட்ட ஆட்ச்சியரை சந்தித்துவிட்டு வந்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் முடிவு கிடைக்கும்.
நம்பிக்கை உண்டு. //
சகோ .புரட்சி மின்னல் அவர்களுக்கு ....தங்களின் மேற்கண்ட முதல் மூன்று வரிகளும் தவறானவை கூப்பிட்ட குரலுக்கு பதில் கிடைக்கும் உலகில் நல்லவர்கள் நிறைய உள்ளனர் ...........Plz come to my mail ID abudpworld@gmail.com
நான் சுட்டிக் காட்டியது மெஜாரட்டியான வெட்டி ஆட்களை.
Deleteகூபிடுமுன்பே என்ன என்று அக்கறையோடு கேட்கும் மைனார்டி ஆட்களில் நீங்களும் ஒருவர். உங்களை குறை சொல்ல முடியுமா?