.

Pages

Sunday, June 1, 2014

அதிரை நியூஸின் முக்கிய அறிவிப்பு !

அன்பான அதிரை நியூஸ் வலைதளத்தின் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கருத்திடுபவர்களுக்கும் அதிரை நியூஸ் நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பு.

அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.

அவ்வகையில்தான் எவ்வித தவறும் நிகழ்ந்துவிடாதவகையில் இந்த வலைத்தளம் தொடங்கிய காலம் முதல் சுத்தமான மனதுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

அதே முறையில்தான் கருத்துச் சுதந்திரங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் அனைவரின் கருத்தையும் தடை இல்லாமல் பிரசுரித்தும் வருகிறோம்.

கடந்த சில வாரங்களாக நாம் இடும் செய்திகளுக்கு இடப்படும் பின்னூட்டங்களில் தனி நபர் விமர்சனங்களும்  சாதிமத இனத் தாக்குதல்களும் வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது.

அதிரை நியூஸ் தனது கண்ணியத்தை கட்டிக் காக்க நினைக்கிறது. இந்த மண்ணில் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்து வளர்ந்திருக்கிறது. அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளால் சமதாயத்தின் பிரிவினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்  தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது ஊரின் பண்பாட்டையும் காலம் காலமாக நாம் கட்டிக் காத்துவரும் கலாச்சாரத்தையும் சிலருடைய வார்த்தைக் குண்டுகள் அதிரை  நியூசைப் பயன்படுத்தி  துளைப்பதை நாம் அனுமதிக்க தயாரில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேன் கூட்டை  கலைப்பதற்காக சிலர் செய்யும் முயற்சிகளுக்கு வழிவகுத்துக் கொடுப்பது எமது நோக்கங்களில் ஒன்றல்ல.

யாரையும் புண்படுத்தாத எவரையும் காயபடுத்தாத பின்னூட்டங்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படும். இந்த நற்பண்பைக்  கட்டிக் காப்பாற்றாத ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்ககூடிய  பின்னூட்டங்கள் நிச்சயமாக நீக்கபடுமென்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கபடுத்தி வரவேற்கும்.

என்றும் உங்களின் அன்பான சேவையில்,

அதிரை நியூஸ். 

13 comments:

  1. சரியான் நேரத்தில் கொடுத்துள்ள அறிவிப்பு. நானும் சில நாட்களாக கமெண்ட்ஸ்கலை படித்து வருகிறேன். சிலர் போலி முகவரியில் தகாத கமெண்ட்ஸ்கலை போட்டு மத உணர்வுகளை தூண்டி வருகின்றனர். சரியான் நேரத்தில் இப்பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்த அதிரை நியூசுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. கடந்த சில நாட்களாக கட்டுப்பாடு இல்லாமல் ஒருவரை ஒருவர் காயபடுத்தும்படியும் உணர்வுகளைத் தூண்டி வன்முறைகளை கையிலெடுக்கும் வகையிலும் - போலி பெயர்களிலும் வந்து கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

    ஒரே சமுதாயத்தில் ஒன்றாக காலம் காலமாக வாழ்ந்துவரும் நம்மிடையே யார் யாரோ பதவி சுகங்களை அனுபவித்துக் கொள்வதற்காக அவர்களின் கைகளில் பகடைக் காய்காளாக யாரும் ஆகிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இது உணர்வு பூர்வமாக சிந்திக்கும் காலம் அல்ல; அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டிய காலம்.

    எதிர்க் கருத்துக்களை கண்ணியமான முறையில் வெளியிடும் போக்கை வளர்த்து சீண்டி விடும் போக்கை களைவது ஒட்டுமொத்த அமைதிகே நல்லதாகும்.

    அதிரை நியூஸ், சுதந்திரமான கருத்தாடல்களை தடை செய்து- மட்டுறுத்தலுக்குப் பின் கருத்தாடல்களை வெளியிடும் முறையை அமுல் படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    உரிமை என்றால் அது எதுவரைக்கும் என்று ஒரு கேள்வி வரும், அடுத்தவர் மனம் புண் படாதவரை நாம் நமது உரிமையை நிலை நாட்டலாம்.

    கருத்து உரிமை என்று வரும்போது அங்கு கண்ணியம் காக்கப்பட வேண்டும். உணர்ச்சிவசப்படக் கூடிய பல தகாத வார்த்தைகளை உபயோகித்து எல்லோருடைய மனதையும் புண்படுத்தி கருத்திடுவது அநாகரிகமானது.

    இன்று இணையதளத்தில் எத்தனையோ வலைதளங்கள் நம் மத்தியில் வலம்வந்து கொண்டு இருக்கின்றனது, அதில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் வலைதளங்களில் மட்டுறுத்தல் இல்லை என்றே சொல்லலாம்.

    வீட்டின் உரிமையாளர் விருந்துக்கு பல பேர்களுக்கு அழைப்பு கொடுத்து விட்டு, வரும் விருந்தாளிகளை பரிசோதித்து விட்டு வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது, வருகின்ற விருந்தாளிகள் எல்லோரும் நல்லவரே என்ற நம்பிக்கையோடு அனுமதிக்கின்றார். அது போலவே வலைதள உரிமையாளர்களும் நிகழ்வுகளை செய்திகளாக தந்து, எந்த ஒரு மட்டுறுத்தலும் இல்லாமல் நம்பிக்கையோடு வாசகர்களை கருத்து சொல்ல அனுமதிக்கின்றார்.

    ஆக, யாராக இருந்தாலும் கருத்து விஷயத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. சரியான் நேரத்தில் கொடுத்துள்ள அறிவிப்பு. நானும் சில நாட்களாக கமெண்ட்ஸ்கலை படித்து வருகிறேன். சிலர் போலி முகவரியில் தகாத கமெண்ட்ஸ்கலை போட்டு மத உணர்வுகளை தூண்டி வருகின்றனர். சரியான் நேரத்தில் இப்பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்த அதிரை நியூசுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. இதே கருத்தை யான் பல முறை சொல்லி விட்டேன்; இப்படிப் பின்னூட்டங்களின் பின்னல்களால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கின்றேன்; நிர்வாகி அவர்களின் சுத்ந்திரத்தை அல்லது மட்டுறுத்தலுக்கு நேரமின்மையைச் சுலபமாக சுதாகரித்துக் கொண்டுப் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பதிவாளர்களின் தனிப்பட்ட விட்யங்களை எல்லாம் காணாததை எல்லாம் கதை கட்டும் போக்குகள் நிரம்பக் க்ண்டு விட்டேன்; இதனாற்றான், பொதுவாக பதிவுகளை இடுவதை நிறுத்தி விட்டேன். நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும் கேட்பாரில்லை; நீங்கள் தான் மட்டுறுததலில் கட்டுப்பாடு செய்து வைத்தால், தானாகவே பின்னூட்டம் பதியப்படாமல் உங்களின் மேலான பார்வைக்கு வந்த பின்னரே நீங்கள் தெரிவு செய்பவைகள் மட்டுமே பதியப்பட வேண்டும்.

    ReplyDelete
  6. வலைத்தளம் நடத்தும் உரிமையாளரின் குமுறல் புரிகின்றது, இனி இதுமேல் நடாக்காது போல பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. GOOD ACTION BEFORE CREAT PROBLEM

    ReplyDelete
  8. Good action before create problem

    ReplyDelete
  9. அதிரை நியூஸின் இணையதள சேவையை உணர்ந்து யாரையும் பாதிக்காவண்ணம் வாசகர்கள் தாங்களின் மேலான கருத்துக்களை தரமான முறையில் பதிவது நலம் பயக்கும்.

    ReplyDelete
  10. //சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.//

    இது அனைவராலும் வரவேற்கும் அம்சம். ஒரு சாரார்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக கருத்து சுதந்திரம் பறிபோகக் கூடாது. சர்ச்சையை தூண்டும் பின்னுட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

    //தனி நபர் விமர்சனங்களும் சாதிமத இனத் தாக்குதல்களும் வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது.//

    உங்கள் உணர்வுகள் அவசியம் மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அடுத்தவரைத் தவறாக சித்தரிக்கும் போக்கை களைய வரும் விபரங்களை பிரசுரிப்பதும் ஜனநாயகம். இல்லையேல் ஒரே சிந்தனை விதங்களை விதைக்க வழி வகுக்க காரணமாகிவிடும். உண்மைகள் அதில் நியாயங்கள் இருப்பின் பிரசுரிக்கலாம்.

    //ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

    இது பத்திரிக்கை நியாயம். நல்ல நிர்வாக முறை. சிலரைத்தவிர அனைவராலும் விரும்பப்படும் ஒன்று.

    //நமது ஊரின் பண்பாட்டையும்
    காலம் காலமாக நாம் கட்டிக் காத்துவரும் கலாச்சாரத்தையும்
    சிலருடைய வார்த்தைக் குண்டுகள்
    அதிரை நியூசைப் பயன்படுத்தி துளைப்பதை நாம் அனுமதிக்க தயாரில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தேன் கூட்டை கலைப்பதற்காக சிலர் செய்யும் முயற்சிகளுக்கு வழிவகுத்துக் கொடுப்பது எமது நோக்கங்களில் ஒன்றல்ல.//

    தேன் கூட்டை கலைக்க என்றுமே அனுமதிக்க வேண்டாம்.
    தேன் எல்லோருக்கும் கிடைக்க அனுமதி என்றும் இருக்க வேண்டும்.
    தேன் சுரம் உள்ளவனுக்கு கசந்தாலும் என்றுமே நன்மை பயக்கக்கூடியது.
    உண்மை தேடல் நியாய மனத்திற்கு தேன் போன்றதே.

    //யாரையும் புண்படுத்தாத எவரையும் காயபடுத்தாத பின்னூட்டங்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படும். இந்த நற்பண்பைக் கட்டிக் காப்பாற்றாத ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்ககூடிய பின்னூட்டங்கள் நிச்சயமாக நீக்கபடுமென்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

    மனதார எல்லோராலும் வரவேற்கும் அம்சம்.

    //எவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கபடுத்தி வரவேற்கும்.//

    பண்பற்றச் சொல், கண்ணியம் இல்லாச் சொல் ஒன்று இருந்தாலும் அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட வேண்டும். பின்பு அதுபோன்றவரின் பின்னூட்டங்கள் எதனையும் அனுமத்திக்கவே கூடாது.

    இக்கருத்திற்கு வந்தவைகளில் நல்ல பின்னூட்டங்கள்:

    //எதிர்க் கருத்துக்களை கண்ணியமான முறையில் வெளியிடும் போக்கை வளர்த்து சீண்டி விடும் போக்கை களைவது ஒட்டுமொத்த அமைதிகே நல்லதாகும். -Ebrahim Ansari //

    //உரிமை என்றால் அது எதுவரைக்கும் என்று ஒரு கேள்வி வரும், அடுத்தவர் மனம் புண் படாதவரை நாம் நமது உரிமையை நிலை நாட்டலாம்.- கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.//

    அடுத்தவர் மனம் என்பதில் பொது தர்மம், நியாயம், உண்மை, சமூக அக்கறை விழிப்புணர்வு என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  11. கருத்து உரிமை என்று வரும்போது அங்கு கண்ணியம் காக்கப்பட வேண்டும். உணர்ச்சிவசப்படக் கூடிய பல தகாத வார்த்தைகளை உபயோகித்து எல்லோருடைய மனதையும் புண்படுத்தி கருத்திடுவது அநாகரிகமானது. சிலர் போலி முகவரியில் தகாத கமெண்ட்ஸ்கலை போட்டு மத உணர்வுகளை தூண்டி வருகின்றனர். சரியான் நேரத்தில் இப்பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்த அதிரை நியூசுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.