.

Pages

Monday, June 2, 2014

மேலத்தெருவின் இருவேறு பகுதிகளில் மண்டையை தொடும் அபாயகரமான மின்கம்பிகள் !

அதிரை மேலதெரு சானவயல் பகுதிகளில் மின்கம்பிகள் சுமார் 100 மீட்டர் நீளத்தில் தொங்கி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடமாடும் பொதுமக்களின் மண்டையை தொடும் அளவிற்கு தொங்கி காணப்படுகிறது.

இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் 16 வது வார்டு உறுப்பினர் அப்பியான் முஹம்மது யூசுப் நம்மிடம் கூறியதாவது :
அதிரை மின்சார வாரியத்தில் கடந்த  பல முறை எடுத்து சொல்லியும் இந்த அபாயகரமாக தொங்கி காணப்படும் மின்கம்பிகளை சரிசெய்ய முயற்சிக்கவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சப்படுகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன் மின்சார வாரியம் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு சரிசெய்ய முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து 'மனித உரிமை ஆர்வலர்' K.M.A ஜமால் முஹம்மது நம்மிடம் கூறியதாவது :
மின்கம்பிகள் கருவ முள்ளு மரத்தில் மீது விழுந்து காணப்படுவதால், இதன் அருகில் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஆடு மாடுகள்  பாதிப்புள்ளாக வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேலதிகாரிகளிடம் தாம் தொடர்பு கொண்டு பேசுவதாக கூறினார்.

அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளர் பிரகாஷ் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசினோம். அபாயகரமாக தொங்கி காணப்படும் இந்த மின்கம்பிகளை நாளை சரிசெய்வதாக நம்மிடம் கூறினார்.


6 comments:

  1. வார்டு உறுப்பினரும் ஜமால் காக்காவும் முயற்ச்சித்தால் இதற்க்கு விரைவில் தீர்வு காணலாம்.

    ஆபத்தாக இருக்கும் இந்த மின்கம்பி வெகுதூரத்தில் மின்கம்பம் இருப்பதால் இன்னும் ஒரு மின்கம்பம் அவசியம் வைக்க வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அதிரை மின்சார வாரியம் முன்புபோல் இல்லை, அவர்களின் செயல் திறன் மழுங்கி விட்டது, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அதிக வருவாயை தருவது அதிரைதான், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மன் பராமரிப்பு இல்லை, கடந்த 28MAY2014ல் பவர் ஷட்டவுன் செய்தார்கள், அதிரை டவுனை விட்டுட்டு கிராமப் புறங்களை கவனித்தார்கள் காரணம் கிராம மக்களின் நெருக்கடி.

    அதிரை டவுன் மக்களும் நெருக்கடி கொடுத்தால்தான் விடிவு காலம் வரும் என்றால் நெருக்கடி கொடுப்பதில் தப்பில்லை.

    அதிரை மின் வாரியத்தில் ஆள் பற்றாக்குறை. காரணம் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குதாம்.

    தமிழ் நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி கேபிள்கள் எல்லாம் மின் கம்பங்களில் கட்டப்பட்டு எல்லா வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கப்படுகின்றது. சட்டப்படி மின் கம்பங்களில் கட்டக்கூடாது, அப்படி மீறி கட்டினால் ஒரு மின் கம்பத்துக்கு அபராதமாக பத்து ரூபாய் வசூலித்தால் வருடத்திற்கு அதிரையில் மட்டும் ஐம்பது இலட்சம் வசூல் ஆகும், அப்போ தமிழ்நாடு முழுக்க எவ்வளவு வசூல் ஆகும். இது பண பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்குமே.

    எது எப்படி இருந்தாலும் ஓரிரு நாட்கள் பாப்போம் நடவடிக்கை எல்லை என்றால் உயர் அதிகாரிகளுக்கு தகுந்த முறையில் தெரியப்படுத்தப்படும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. இதுபோன்று மின் கம்பங்களும் சாய்ந்த
    நிலையில் எத்தனையோ? அதிகாலை பள்ளிக்கு செல்லும் பழக்கமுள்ளவர்களுக்கு அன்று இரவு காற்றுவீசிளாளோ மழை பெய்தாளோ வெளியில் செல்ல அச்சம்மாக உள்ளது காரணம் மின்கம்பிகள் அறுந்து கடக்கும்மோ என்றுதான்.சம்மந்தப்பட்ட மினவாரியம். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை மேற்க்கோள்கள் வேண்டும்மென்று கேட்டுக்கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. மின் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ஒரு கை போதாது, பல கைகள் இணைய வேண்டும், இங்கு யாரும் தயாராக இல்லை.

      எங்களுடைய முழு நேரத்தையும் இதில் செலவு செய்கின்றோம், சாதிக்கின்றோம், உதவிகள் ஏதும் கேட்டால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளும் மக்கள்தான் எங்கள் மத்தியில் இருக்கின்றனர்.

      அதிரையை மின் குறை இல்லாத ஊராக மாற்ற வேண்டுமா? இணைவதற்கு மனசு இருக்குதா? நீங்கள் தாராளமாக வரலாம்.

      Delete
  4. மின்வாரியத்தின் அவல நிலை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.