ஃப்ளோரன்ஸ் டேவிஸ் - க்லென்ஸி தாமஸ் என்ற இவ்விரு பிரிட்டன் இரட்டைச் சகோதரிகளுக்கு தற்போது 103 வயதாகிறது. கடந்த 1911ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி இந்த இரட்டைச் சகோதரிகள் 5 நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்.
இவர்களுக்கு திருமணமாகி 5 குழந்தைகள், 12 பேரப் பிள்ளைகள், 19 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். தங்களது வாழ்நாள் முழுவதும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்த இவ்விருவரும் தற்போது முதியோர் பாதுகாப்பு இல்லத்துக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.
தங்களது பெரும்பாலான நேரத்தை ஒன்றாகவே செலவிடும் இவ்விருவரும், தங்களது வாழ்க்கை மிக அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிந்ததாகக் கூறுகின்றனர்.
இவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும், புரிந்து கொள்ளும், நிதானம், ஒற்றுமை, அன்பு, எல்லாம் பரிசுத்தமாக இருந்ததினால் இப்படி இணைபிரியாமல் இருக்க முடிகிறது.
ReplyDeleteநம் மக்களிடம்?