.

Pages

Saturday, February 14, 2015

காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தீர்மானம் !

காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
               
பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க கூட்டம், சின்னையா தெரு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் பொறியாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் கந்த கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
           
கூட்டத்தில் , " காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் இருப்புப்பாதை, அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக கடந்த (15-03-2012 ) 2012 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஆனாலும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் 107 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த தடத்தில் உள்ள பணிகள் அரைகுறையாக முடிக்கப்படாமல் பாதியோடு நிற்கிறது. காரைக்குடி, அதிராம்பட்டினம், அறந்தாங்கி என பல்வேறு இடங்களுக்கு படிப்பதற்காக செல்லும் மாணவர்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வரும் மத்திய நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள், பொது அமைப்புகள் இணைந்து குரல் கொடுத்திடவேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
               
அலெக்சாண்டர், வேணுகோபால், ஈகா வைத்தியநாதன், ஜெயசீலன், சிவசாமி, சாகுல்ஹமீது, லாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுகுமார் நன்றி கூறினார்.
             
அகல ரயில்பாதை திட்டத்தை உடனடியாக விரைந்து  நிறைவேற்ற வலியுறுத்தி பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு தமுஎகச கிளைகள் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அதே போல் அண்மையில் பட்டுக்கோட்டை ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கமும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. தாமதமாகி வரும் இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி  இடதுசாரி இயக்கங்கள், தமிழக மக்கள் புரட்சிக்கழகம், ஆதனூர் மகாத்மா காந்தி இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை  வர்த்தக சங்கங்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: எஸ். ஜகுபர்அலி,
பேராவூரணி.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வீரமான முயற்சி, விவேகமான பலன். விருப்பப்படியே மக்களின் ஆனந்தம், தூரம் நின்றாலும் தூங்காத உள்ளங்கள் இனி தூங்கும்.

    அகல இரயில் பாதைக்காக அதிரை சுற்றியுள்ள பகுதிகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, நிச்சயமாக அகல இரயில்பாதியில் வண்டிகள் ஓடிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இதற்காக பாடுபடுபவர்களுக்கு நன்றிககளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் அதிரையில் வண்டிப்பேட்டை முக்கம், கடைத்தெரு முக்கம், காலேஜ் முக்கம், மேலும் பல முக்கங்களில் சில பண முதலைகள் ஹாயாக அமர்ந்து, காற்று அடிக்கிற வேகத்தில் கட்டி இருக்கும் கைலி இடுப்புக்கு மேலே பறக்கிற சுவடு தெரியாமல், பிணத்தைபோல் வாயை பிழந்துக் கொண்டு எதையோ இழந்தது மாதிரி மூஞ்சை உம்ம்ம்ம் மென்று வைத்துக் கொண்டு இருப்பது பயமாக இருக்கின்றது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.