.

Pages

Monday, February 16, 2015

முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே உண்ணாவிரத போராட்டம் !

முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் உள்ளது. இதில் சுற்று புறமும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவருகிறது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்களையும் தனியார் ஆக்கிரமித்தால் தண்ணீர் வர தடைப்பட்டு குளம் வரண்டு போகி இதனால் சுமார் 5 வருடங்களுக்கு மேல் குளம் மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் போனது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன் பாட்டில் இல்லாத இந்த குளத்திற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்து குளத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வசதியாக தடுப்பு சுவர் மற்றும் படித்துறைகள் நல்லநிலையில் இருந்தும் அதனை இடித்து பணிகளை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவர் கடந்தாண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சென்ற ஆண்டு டிசம்பர் 6-ந்தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம் 3 மாதகாலம் அவகாசம் கோரியது அதனையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய தினமே பேரூராட்சி நிர்வாகம் பிப்ரவரி மாதம் (இந்தமாதம்) இறுதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு மார்ச் 15ந்தேதிக்குள் நீதிமன்றதில் ஆதாரங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தை அளவீடு செய்து 59 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோடீஸ் அனுப்பியது. இதில் பேரூராட்சியில் பணி புரியும் துப்பரவு தொழிலாளர்களின் வீடுகள் முழுவதும் அகற்றும் நிலை ஏற்ப்பட்டது. ஆனால் யாரும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் 59 ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி நோடீஸ் அனுப்பியது. இதில் கடந்த பிப்ரவரி 7ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் இல்லையேல் வருகிற பிப்ரவரி 10-ந்தேதி பேரூராட்சி நிர்வாகமே அகற்றும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சியில் பணி புரியும் 30 துப்பரவு தொழிலாளர் தங்களுக்கு மாற்று இடம் அரசு தரவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வீட்டிலேயே இருந்துக்கொண்டு பணிக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடந்த சில நாட்களாக முத்துப்பேட்டை நகரில் குப்பைகள் அள்ளிச்செல்லும் பணியில் தடை ஏற்பட்டது. இதனால் நகரில் ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக காணப்பட்டன. இந்தநிலையில் இன்று காலை முத்துப்பேட்டை பேரூராட்சியின் அருகே துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு குறவர் சங்க மாநில தலைவர் தலைமை வகித்தார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின் இறுதியில் டி.ரவி நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, சூனா ஈனா
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.