.

Pages

Monday, February 23, 2015

'ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்' - டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ)

புனித குரான் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தில், 'இறை நேசிப்போரே, ஒற்றுமை என்ற கயிற்றினை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பல குழுக்களாக பிரிந்து நிற்காதீர்கள்' என்று ஒற்றுமையினை வழியுறுத்தி உள்ளது.' அதனையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் முஸ்லிம்களிடையே 5.5.1970 ஆம் ஆண்டு பேசும்போது 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம், சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக, மிக அவசியம். சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ முடியாது, அவர்கள் சேர்ந்து வாழக்  கடமைப் பட்டிருப்பது குரானின் கட்டளையாகும்' என்றும் ஆணித் தரமாக கூறியுள்ளார்.

கீழே உள்ள போட்டோவினை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்:
இந்தப் போட்டோவில் இந்திய  அரசியல் வானின் இரு துருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஹிந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடி அவர்கள்,  மற்ற இருவரும் ஹிந்துத்துவா  கொள்கைக்கு எதிரான  பீகாரினைச் சார்ந்த லாலுப் பிரசாத் யாதவும், உத்தரப் பிரதேசத்தினைச் சார்ந்த முலாயம் சிங் யாதவும் ஆகும். அரசியல் வானில் இரு துருவங்களானாலும், 20.2.2015 அன்று நடந்த குடும்ப நிகழ்வில் மூன்று தலைவர்களும் சிரித்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்  அதே போன்ற நிகழ்ச்சியில் நமது சமூதாய தலைவர்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் பேசி நட்புடன் பழகியதினை நான் பார்த்ததில்லை, நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற முடிவில் இந்தக் கட்டுரையினை வரைகிறேன்.

உள்ளன்புள்ள நட்பு என்பது ஒருவருக்கொருவர் முகமன் கூறுவது, பண்புடன் நடந்து கொள்வது, அன்பு பாராட்டுவது ஆகும்.

பலவகையாகும் உறவு:
1) நண்பருடன்  பழகுவது, சக ஊழியர்களுடன் பழகுவது, குடும்பத்தில் உறவு கொள்வது ஆகும்.

2) நண்பர்களுடன்  உறவு கொள்வது ஏனென்றால் ஒரு செயல் நல்லதா அல்லது கேடு விளைவிப்பதா என்று எடுத்துச் சொல்ல ஒருவரின் துணை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதனால்.

3) நல்ல நட்பு வேலைபார்க்கும் இடத்தில் வெற்றிக்கு வழி வகுக்கும்.

4) பெற்றோர், உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவு குடும்பத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும்.

சிலர் வானளாவிய ஒற்றுமையினைப் பற்றியெல்லாம் வாய் கிழியப்பேசுவர். ஆனால் நடைமுறையில் அவர்கள் எதனையும் கடைப்பிடிப்பதில்லை. நாமெல்லாம் ஒரு மரத்தில் உள்ள இலைகள் என்றோ, அல்லது  மொழி , இனம் நிறத்தால் வேறு பட்டிருந்தாலும் மார்க்கத்தால் ஒன்று பட்டிருக்கின்றோம் என்றோ நினைப்பதில்லை. இஸ்லாம் என்ற மார்க்கம் இருப்பதால் தான் பல்வேறு இயக்கங்களை நாம் நடத்தி வருகிறோம், ஆகவே அந்த மார்க்கத்தினர் நல்வழி, நட்புடன், நலத்தோடு  வாழக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு தலைவரின் கடமை என்று நினைத்துப் பணியாற்றுவதில்லையே, அது ஏன் என்று உங்களுக்கு கேள்வி கேட்கத்  தோனுமல்லவா ?

22.2.2015 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.ஆர்.எஸ். சக்கா என்ற ஊழியர் பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத், 'அனைத்து ஹிந்து அமைப்பினரையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகள் அமைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விட்டிருக்கின்றார். அந்த ஒற்றுமை உணர்வினை ஒருவரும் குறை கூறமுடியாது. அதே ஒற்றுமை அறைகூவல் ஏன் சமூதாய இயக்கங்களிடையே அதன் தலைவர்கள் வேண்டுகோள் விடக்கூடாது. குறைந்தது பொது நன்மைக்காவது இனைந்து வேண்டுகோள் வைக்கக்கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவு வைத்துக் கொண்டால் தானே அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கப் போகின்றார்கள் என்று கேள்வி கேட்க உங்களுக்கு தோனுகின்றதல்லவா ?

21/22.2.2015 ஆகிய நாட்களில் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள அலமாதி என்ற ஊரில் 'இஸ்த்திமா' நடந்தது. மார்க்க சொற்பொழிவினைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக அங்கே சென்று வந்த நண்பர்கள் சொல்ல மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மாநாட்டின் நிறைவேற்றிய தீர்மானம் என்ன என வினவினேன். அதற்கு மார்க்க பயான்கள் நடந்தன, ஐந்து தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது, இறுதியாக துவா ஓதப்பட்டது என்றார்கள். ஏழு சதவீத தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு சேரப் பார்ப்பதே அரிது. அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இன்று சிறுபான்மையினர் இந்தியாவில் எதிர் கொள்ளும் சவால்கள், உலக முஸ்லிம்களின் நிலைப்பாடு, இளைஞர்கள் சிறந்த வழியில் நடப்பதிற்கு உரிய அறிவுரைகள் ஆகியவற்றினை போதித்திருந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமல்லவா ?

உதாரணமாக:
1) முத்துபேட்டை தர்கா புது வருடப் பிறப்பு அன்று தாக்குதல், புது டெல்லி சர்ச், நாகர்கோவில் ஜெபக் கூடாரம் தாக்குதல் போன்ற சிறுபான்மையினர் வழிபடும் தளங்களை தாக்குதலிருந்து எவ்வாறு பாது காப்பது என்ற அறிவுரை.

2) உ.பி. போன்ற மாநிலம்  முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம், பெண்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாக நேர்ந்த சம்பவம் போன்று சிறுபான்மையினர் வாழும் கிராமம், நகரங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்வது

3) முஸ்லிம்கள் தனிப்பட்ட விரோதங்கள், மொழி, இனத்தால், குடும்பத்தால் வரும் பிரிவினைகள் மறந்து ஒற்றுமையுடன் வாழ என்ன செய்யலாம்

4) இளைஞர்கள் தீவிர வாத கொள்கைகளுக்கு தங்களை பலிகிடாவாக்கக் கூடாது என்ற போதனைகள் சொல்லலாம். சமீபத்தில் பெங்களூரு நகர முஸ்லிம் பொறியியல் எஞ்சினீயர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கப் போய் பட்ட துன்பங்கள், இங்கிலாந்து நாட்டின் முஸ்லிம் பள்ளி சிறுமிகள் மூவர் ஐ.எஸ்.தீவிர வாத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்க பள்ளிப் படிப்பு, குடும்ப பாசத்தினை விட்டு சிரியா சென்றிருப்பதும், 22.2.2015 அன்று நைஜீரியா நாட்டில் ஏழு வயது சிறுமி வெடிகுண்டாக மாறி பலரை சாகடித்திருப்பது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தாமலில்லை! அதுபோன்ற தீய போதனைகளிடமிருந்து இளைஞர்களை காப்பது எப்படி என்று அறிவுரை புகன்றிருக்கலாம்.

5) இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.

முஸ்லிம்கள் பிரதிநிதிகளாக இருந்தால் தான் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆகவே பிரிந்து கிடக்கும் சமூதாய தலைவர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்று அங்கு கூடியிருந்த அமைப்பாளர்கள் சொல்லி இருந்தால் சாலச் சிறந்ததாக இருந்து இருக்கும்.

ஆகவே இனி வரும் காலங்களில்லாவது சமூதாய ஒற்றுமை, தலைவர்கள் ஒருங்கிணைப்பு, வழிபாடு தளங்கள் பாது காப்பு, முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு,   இளைஞர்கள் நல் வழிப் படுத்துதல் போன்ற செயல்களில் முஸ்லிம்கள் கூடும் கூட்டங்களில் கொள்கை முடிவெடுத்தால் சிறப்பாக இருக்குமல்லவா ?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

4 comments:

  1. "ஒற்றுமை என்னும் கயிறைப் பற்றிப் பிடிங்கள்" என்று போதிக்கப்பட்ட இவர்கள் தனித்தனி ஒன்றுகளாகிவிட்டனர் ! வேதனையே !
    ஆனாலும் இவர்கள் 'தானாடாவிட்டாலும் தன் தசையாடும்' என்பதற்கிணங்க தர்ஹா விவகாரத்தில் சிலர் உரிமைகளை ஒலித்தனர். பெருமானார் விவகாரத்திலும் சிலர் 'நம் உயிரைவிட மேலானவர்கள்' என்று முன்னர் போஸ்டர் அடித்தனர். அதுவும் காலபோக்கில் மங்கிப்போய்விடுமோ ! என்ற அச்சம் ஏற்ப்படாமல் இல்லை ! அல்லாஹ் அவனை உயிரைவிட மேலாக நேசித்த மகான்களை இறை வணக்கத்திலும்; மகான்கள் மரியாதையிலும் குழப்பிக்கொள்கின்றனர். கூகுளில் மின்னஞ்சலில் சிலர் சிலதை சிதைத்து மின்னஞ்சல் சம்பந்தமில்லாமல் சில செய்தி தொடராக சுற்றிவருவதுப்போல் இவர்களில் கொள்கையில் குழப்பத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளது வேதனையே ! அதன்மூலம் இவர்கள் பிரிக் கழன்ற கயிராகிவிட்டனரே !

    //கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் முஸ்லிம்களிடையே 5.5.1970 ஆம் ஆண்டு பேசும்போது 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம், சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக, மிக அவசியம். சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ முடியாது, அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப் பட்டிருப்பது குரானின் கட்டளையாகும்' என்றும் ஆணித் தரமாக கூறியுள்ளார்.// என்பதை பலதடவை விட்டுவிட்டு ஞாபகப்படுத்த சிலர் ஒன்றுகூடினாலும் கூடலாம் என்ற ஆசைதான்...ஏற்படுகிறது !

    தகுந்த நேரத்தில் தகுமான அறிவுரைகளே இக்கட்டுரை.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. கால சூழலுக்கேற்ற அனைவரும் உணரவேண்டிய பதிவு ! ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்று சொல்வதுபோல என்னதான் உட்பிரிவினைகள் இருந்தாலும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று குரல்கொடுத்தால்தான் எதையும் நாம் சாதிக்க முடியும். இதை உணராத வரை ஒருகை ஓசை போல நமது சப்தம் வெளியில் தெரியாமல் போய்விடும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    மிகவும் அருமையான கட்டுரை, விளக்கமும் அருமை, விளக்கத்தோடு வழிகாட்டுதலும் அருமை.

    என்னதான் கவர்ச்சியாக பேசத் தெரிந்தாலும் அந்த பேச்சில் முதிர்மை இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை.

    உங்களுடைய இந்த கனிவான ஆதங்கம் இன்ஷா அல்லாஹ் நிறைவேறும்.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
  4. மனைவி: மாட்டை அடித்தவர் (லாலு)மனிதனை கொன்றவர் (மோடி) ஊரை அடித்து உலையில் போட்டவர் (முலாயம் ) மூன்னும் ஒன்னு சேர்ந்திருக்கு மச்சான்- பா ர் த் தீ க ளா?

    கணவன்: டெல்லியில் கொடுத்த ஆப்பு ( AAP ) அவங்கள ஒன்னு சேரவட்சிருக்கு, டெல்லியில் டவுசர் பாண்டிய விட்டு ஓட்டு கேட்டும் விலாதது முனுமுனுப்பு ஏற்பட்டிருக்கு புள்ளே.

    மனைவி: டவுசர் பண்டிஎல்லாம் எல்லையில்ல போய் சண்ட போடவேண்டியது தானே, அதைவிட்டு இங்கே இடிக்க வேண்டியது:

    கணவன்: சிறுபான்மையரை தாக்கக்கூடாதுன்னு கண்டிப்பா மோடி சொல்லிட்டாரு, இருந்தாலும் RSS முன்னாள் சொல்ல தைரியம் இல்லபுள்ள - இரு வெளியில் போயிட்டு வந்திடுறேன்.....

    கணவன்: ஏண்டி , தண்ணி கொண்டுவா
    மனைவி ; மச்சான், மோடி மங்கி பாத் பேசுறாரு ரேடிவோல.

    கணவன் : நான் குளிக்க தண்ணீ இல்ல இதுல குரங்க குளிக்க வைக்க முடியுமா? அந்தாளு பேசி பேசி அறுப்பாரு, மன்மோகன் பெட்டருடி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.