.

Pages

Thursday, February 19, 2015

விளையாட்டு போட்டிகளில் சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கெளரவிப்பு !

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாகபட்டினம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடினர்.

இதில் ஓட்டப்போட்டிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் பி. முத்துராஜ் முதல் இடத்தையும், ஆறாம் வகுப்பு மாணவர் அப்சர்கான் மூன்றாம் இடத்தையும், ஏ. எழாம் வகுப்பு மாணவர் அஜ்மல்கான் ஆறாம் இடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் எம்.முரளிதரன், பி.அப்சர் ஆகியோர் வெற்றி பெற்று சான்றிதல் மற்றும் ரொக்கப் பரிசுகளை பெற்றனர்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வகையில் பள்ளியில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி ஏ. மஹபூப் அலி. முதுகலை ஆசிரியர் நாகராஜன், கணேஷன், அஜுமுதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, ஜெயகாந்தன் மற்றும் 'அதிரை நியூஸ்' நிர்வாகி இத்ரீஸ் அஹமது ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.

பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சக மாணவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

1 comment:

  1. மாவட்டஅளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள், நம்வூர் மாணவர்கள் எப்போதும் Athletics மட்டும் தான் பரிசுகள் வாங்கிவருகிரார்கள் ஏன் Badminton , Table Tennis , Gymnastics , Swimming and Tennis வரமாட்டன்கிறாங்க. நம்ம மாணவர்கள் நல்லாவே ஸ்விம்மிங் பண்ணுவார்கள் ஆனால் அதற்க்குன்டான Coacher இல்லையென தோன்றுகிறது.

    மாவட்டஅளவில் சாதனை படைத்த மாணவர்களே நீங்கள் தேசியளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி வாகை சூட்ட வாழ்த்துகிறேன்.

    சுனாமில ஸ்விம்மிங் அடிக்கக்கூடிய நம்ம மாணவர்கள் ஸ்விம்மிங் போட்டியில் கலக்க தயாராகுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.