.

Pages

Saturday, February 21, 2015

கோர்ட் உத்தரவின் பேரில் தக்வா பள்ளி மீன் மார்க்கெட் இடம் திடீர் அளவீடு !

அதிரையின் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க மார்க்கெட் தக்வா பள்ளி நிர்வாக பராமரிப்பில் உள்ள கடைத்தெரு மீன் மார்க்கெட் ஆகும். இங்கு அதிரையை சேர்ந்த ஏராளமானோர் தொழில் செய்து வருகின்றனர். தினமும் மார்க்கெட்டிற்கு வருகை தரும் பலரும் இங்கு விற்பனையாகும் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்வதுண்டு. இதனால் இப்பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

இங்கு காணப்படும் சில கடைகள் சுகாதாரமற்று இருப்பதாக அவ்வபோது புகார் எழும். அதேபோல் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.

கடந்த 01-04-2013 அன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமைவாய்ந்த மீன் மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக அதிரைவாழ் சமூக ஆர்வலர் பலரை அவ்வப்போது அணுகி ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை பெற்று வந்தனர். இதைதொடர்ந்து மீன் மார்க்கெட் பகுதியை ₹ 85 இலட்சம் பொருட்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக கடந்த [ 17-06-2013 ] அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அதிரையை சேர்ந்த ஒருவர் திடீரென அளித்த புகாரின் பேரில் கட்டுமான பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சில காலங்கள் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கி கிடந்தது.

இந்நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் இன்று காலை தக்வா பள்ளி நிர்வாகம் சார்பில் வளாகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மீன் மார்க்கெட் பகுதியை அளப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நபரின் தலைமையில் பிர்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் இடம் அளவீடு செய்யப்பட்டது. இதில் எதுவரை எல்லைகள் உள்ளது என்பதை கண்டறிந்தனர். இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலஅளவையின் போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டியினர், வார்டு கவுன்சிலர் ஆகியோர் உடன் இருந்தனர். திடீரென மீன் மார்கெட் பகுதியை அளந்ததால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

4 comments:

  1. //இந்நிலையில் அதிரையை சேர்ந்த ஒருவர் திடீரென அளித்த புகாரின் பேரில் கட்டுமான பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சில காலங்கள் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கி கிடந்தது.//

    ஊரின் முன்னேற்றம் பிடிக்காத சில சமூக குழப்பவாதிகளின் வேலைதான் இது ...அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் .

    ReplyDelete
  2. புகார் அளித்த நபர் யார்? அவர் சார்ந்த கட்சி குறிப்பிட்டால் அறிய இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
  3. புகார் அளித்த நபர் யார்? அவர் சார்ந்த கட்சி குறிப்பிட்டால் அறிய இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
  4. யார் அந்த ௧ள்ள ன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.