.

Pages

Friday, February 20, 2015

தரகர் தெருவில் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டத்தில் ASC அணி வெற்றி !

அதிரை ஆசாத் நகர் [ தரகர் தெரு ] ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] நடத்தும் மாபெரும் 10 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி இன்று இரவு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தரகர் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் பசூல்கான், கால்பந்தாட்ட வீரர் லியாகத் அலி, தினமலர் நிருபர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பளு தூக்கும் போட்டியில் ஆசிய அளவில் சாம்பியன் பட்டதை பெற்ற அப்துல் ரவூப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார்.

இன்றைய முதல் ஆட்டத்தில் அதிரை ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] அணியினரும், கடலூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் ASC அணியினர் வெற்றி பெற்றனர்.

ஆட்ட அம்பயர்களாக ராசீத் மற்றும் முத்து முஹம்மது ஆகியோர் இருந்தனர். இன்றைய முதல் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் வருகை தந்தனர். விழா ஏற்பாடுகளை அஹமது கான், முத்து முஹம்மது, ஹாஜா, ராசீத், யூனுஸ்கான், ராஜா முஹம்மது, கார்திப்கான் ஆகியோர் செய்து இருந்தனர். அடுத்த ஆட்டமாக WSC அணியினரும் கடற்கரை தெரு அணியினரும் ஆட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த மாபெரும் தொடர் போட்டியில் உள்ளூர் அணிகள், கடலூர், மாயாவரம், திருவாரூர் உள்ளிட்ட வெளியூர் அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள்:
முஹம்மது ஷாஃபி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.