இன்று வெள்ளிக்கிழமை 20.02.2015 காலை 11.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார்பவனில் துபையில் இயங்கி வரும்”வானலை வளர்தமிழ் தமிழ்த்தேரின் 86வது கவியரங்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி ஆனிஷா பாடினார்;
கனடா நாட்டிலிருந்து இணையதளம் வாயிலாக அறியப்பெற்ற கவிஞர் அன்புடன் புகாரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அவர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் சிறப்புகள் மற்றும் அவர்களின் வெளியீடுகள் பற்றிய நீண்ட பட்டியலைப் படித்தும், அவர்களின் மீது அன்புடன் புகழ்மாலையை இயற்றி அதிரை கவியன்பன் கவிதை வாசித்தும் ஓர் அறிமுக உரையை நிகழ்த்தினார்கள்.
கவியரங்கத்தைத் திருமதி.ஸ்வேதா கோபாலுடன் இணைந்து திருமதி.ரமா மலர்வண்ணன் நடத்திக் கொடுத்தார்கள். புதுமையான முறையில் கவிஞர்களின் சிறப்புகளை வர்ணித்தும் அவர்களின் கவிதைகளிலிருந்து சில வினாக்களைக் கேட்டுத் தெளிவு பெற்றும் சபையை மகிழ்ச்சியிலார்த்தினார்கள்.
இந்த இலக்கிய அமைப்பின் தலைவர் திரு.காவிரிமைந்தன், பதிப்பாசிரியர் திரு.ஜியாவுதீன், மற்றும் கவிஞர்கள்: அதிரை கவியன்பன், அதிரை. மெய்சா, கவிஞர் சந்திரசேகர், கவிஞர் சசிகுமார், கவிஞர் தஞ்சாவூரான், கவிஞர் குறிஞ்சி நாடான், மற்றும் கவிதாயினிகள் திருமதி.நர்கிஸ்ஜியா. திருமதி.ரமாமலர், திருமதி ஸ்வேதா கோபால்,திருமதி மீனாகுமாரி பத்மநாபன் மற்றும் செல்வி ஆனிஷா ஆகியோரும் கவிதைகள் வாசித்தளித்தனர்.
நமதூர் கவிஞர் கலாம் அவர்களை ”திருத்தொண்டர்” என்றும் (மரபு விருத்தப்பாக்களை எழுதுவதால்) அதிரை. மெய்சா அவர்களை “வைரமுத்து” என்றும் (சமூக விழிப்புணர்வு கவிதைகளை எழுதுவதால்) குறிப்பிட்டுக் கவியரங்கத் தலைவி திருமதி ஸ்வேதா கோபால் அவர்கள் அழைத்தார்கள்; இவ்வாறே ஒவ்வொரு கவிஞர்கள்/கவிதையானிகள் அனைவருக்கும் ஓர் அடைமொழி இட்டழைத்தது ஒரு புதுமையாகவும் சுவையாகவும் இருந்தது.
சிறப்பு விருந்தினர்:
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அன்புடன் புகாரி அவர்கள் அழைக்கப்பட்டுக் கவரவிக்கப்பட்டார்கள்; அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசில்கள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்கள். அதுபோல், இவ்விழாவில் தன்னை வரவழைத்து வாய்ப்பளித்தமைக்கு நன்றியாக இந்த அமைப்பின் தலைவ ர் திரு.காவிரி மைந்தன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் அவர்களுக்கும் “அன்புடன்” புகாரி அவர்கள் நினைவுப் பரிசில்கள் வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினரின் சிறப்பான கவிதை வாசித்தல்:
அன்புடன் புகாரி அவர்கள் தான் இயற்றி வெளியிட்ட நூல்களில் அருமையான வரிகளைத் தானே வாசித்து விளக்கினார்கள்; மேலும், இவ்விழாவிற்கு அழைத்துப் பங்குபெற காரணமாக இருந்த கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதின், அதிரை கலாம் மற்றும் அதிரை மெய்சா ஆகியோரைப் புகழ்ந்தும் கவிதையில் பாடி பரவசப்படுத்தினார்கள்.
புத்தக வெளியீடு:
கனடா கவிஞர்அன்புடன் புகாரி அவர்கள் இயற்றிய கவிதைத் தொகுப்பு நூல்கள் அவர்களின் கரங்களால் அங்கு வெளியிடப்பட்டன.
நன்றியுரை:
பதிப்பாசிரியர் கவிஞர் ஜியாவுதீன் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்; குறிப்பாக, சிறப்பு விருந்தினர் கனடா கவிஞர் அன்புடன் புகாரி அவர்களின் அன்பு, பாசம், நட்பு மற்றும் கவித்திறன் ஆகியவற்றை உணர்ந்து கொள்ள வாய்ப்பளித்து அவர்களை இவ்விழாவிற்கு வரவழைத்த அதிரை கவியன்பன் கலாம் மற்றும் அதிரை. மெய்சா ஆகியோர்களுக்குச் சிறப்பான வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமுக்கடலின் சங்கமத்தை இப்பதிவு வழியாக காணும்போது மேடையில் அமர்ந்த மெல்லிய பூங்காற்றுகளின் சங்கமத்தை போன்று இருக்கின்றது.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
மாஷா அல்லாஹ், எங்கள் கவிஞர் அதிரை மெய்சாவை மேடையேற்றி விட்டோம். அவர் இன்னும் மேடைகள் ஏறி உயர்ந்த புகழை ஈட்ட வேண்டும்; அதற்கு என் ஆதரவும் அரவணைப்பும் என்றும் உண்டு.
ReplyDeleteசகோதரர் அதிரை மெய்சா விற்க்கு எங்கள் நெஞ்சாரிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாராட்டிய நல்லுங்களுக்கும் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் இணைந்து எனது விழிப்புணர்வு கட்டுரைகளையும் கவிதைகளையும் வாசிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteதுபையில் என்னை இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தி வானலை வளர்தமிழ் மன்றத்தாருக்கு என்னை அறிமுகப்படுத்திய கவித்தீபம் கலாம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
சகோதரர் கவிஞர் புகாரி முன்னிலையில் கனடா நாட்டில் டொரொண்டோ மாநகரில் பட்டிமன்றம் நன்கு சிறப்பாக நடைபெறுகின்றது.
ReplyDeleteசகோதரர் கவிஞர் புகாரி முன்னிலையில் கனடா நாட்டில் டொரொண்டோ மாநகரில் பட்டிமன்றம் நன்கு சிறப்பாக நடைபெறுகின்றது.
ReplyDeleteமாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ்.!
ReplyDeleteஎனது நன்பர் மேடை ஏறிவிட்டார்...
எங்கள் கவிஞர் *அதிரை மெய்சா* அவர்கள் மேடையேற்றி விட்டார் . அவர் இன்னும் பல மேடைகள் ஏறி உயர்ந்த புகழை ஈட்ட வேண்டும்.
முதல் அரங்கேற்றம்...
ReplyDeleteஎனது (நன்பர்) சகோதரர் மெய்ச அவர்களுடைய ஆசை என்பதை விட,
நீண்ட நாளைய கனவு என்று சொல்லுவேன்.! கவிதை எழுதுவதிலும்,வாசிப்பதிலும் உணர்ச்சி பூர்வமஹா செய்வதை கண்டவன்.!
**மெய்சா அவர்களை அரங்கில் “வைரமுத்து” என்று ,
திருமதி ஸ்வேதா கோபால் அவர்கள் அழைத்தார்கள்.! இது
முதல் அரங்கேற்றம்.
அதிரை மெய்ச அவர்கள் இன்னும் பல மேடைகள் ஏறி அவருக்கும், அதிரை மண்ணுக்கும் புகழ் சேர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
***நெஞ்சாரிந்த வாழ்த்துக்கள்***
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஅதிரை மெய்ச அவர்கள்
இன்னும் பல மேடைகள் ஏறி அவருக்கும், அதிரை மண்ணுக்கும் புகழ் சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
***நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்***
சகோதரர் அதிரை மெய்சா விற்க்கு எங்கள் நெஞ்சாரிந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete