.

Pages

Wednesday, February 25, 2015

எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணை கைதியை சுட்ட எஸ்.ஐ.யை கொலை வழக்கில் கைது செய்ய முடிவு: சிபிசிஐடி போலீஸார் தீவிரம் !

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலை யத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இளைஞர் இறந்த வழக்கில் எஸ்.ஐ. மீது கொலை வழக்கு பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அவர் எஸ்.ஐ. கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.பட்டினம் காவல் நிலை யத்தில் 14.10.2014 அன்று விசா ரணைக்காக அழைத்துவரப்பட்ட சையது முகம்மது என்ற இளைஞர் எஸ்.ஐ. காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் வேலுச்சாமி விசாரணை நடத்தி னார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மதுரை சிபிசிஐடியின் தனிப்படையினர் விசாரித்தனர்.
விசாரணையின்போது தன்னை கத்தியால் குத்த சையது முகம்மது முயன்றதால், தற்காப்புக்காக சுட்டதாக எஸ்.ஐ. காளிதாஸ் தெரிவித்தார். ஆனால் எஸ்.ஐ. திட்ட மிட்டே சுட்டுக்கொன்றதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எஸ்.ஐ.யின் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுதான் சையது முகம்மதுவை கொன்றது என்ற தடய அறிவியல் ஆய்வக ஆய்வறிக்கையானது விசாரணை குழுவினருக்கு கிடைத் தது. சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர்.

இது குறித்து சிபிசிஐடி விசாரணை குழுவில் இடம்பெற்ற அலுவலர்கள் கூறியதாவது: 
சம்பவத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்தியதில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு, சையதுமுகம்மதுவால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை. ஓர் உயிரிழப்புக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சிபிசிஐடி தலைமையகத்துக்கு ஒப்புதலுக் காக அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.ஐ. மீது குற்றச்சாட்டு பதிய டி.ஐ.ஜி.யிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான கடிதம் ராமநாதபுரம் டி.ஐ.ஜி.க்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இந்த அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக் கப்படும். ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலை யில், ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் தங்கியுள்ள எஸ்.ஐ. காளிதாஸ் கைதாகும் நிலை உருவாகும் என்றனர்.

நன்றி: தமிழ் ஹிந்து

3 comments:

  1. Good news for bereaved family and friends.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வாய்த் தகராறு காரணமாக செய்யது முகமதுவை போலீஸ் நிலையத்தில் விசாரித்த எஸ்.ஐ., காளிதாஸ் காட்டுமிராண்டித்தனமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் மார்பிலும், விலா பகுதியிலும் சுட்டு கொலை செய்துள்ளான், இவனுக்கு தற்காலிக பணிநீக்கம் இதே மற்ற நாடா இருந்தால் தொங்க விட்டு இருப்பாங்க.

    இஸ்லாமிய இயக்கங்கள் விசாரணை மாற்றக்கோரி வலியுர்த்தியதால் சிபிசிஐடி மாற்றப்பட்டது இல்லையேல் தமிழக அரசு கொடுத்த 5 லட்சத்தோடு கேச மூடிடுவானுங்க.

    இன்னமும் இவன போலீசுன்னு உலகம் நம்புது? பக்கா ரௌடி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.