நூறு ஆண்டுகளுக்கு பழமையான நமதூர் ரயில் சேவையை 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் நமது பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரயில்கள் விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றுதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்துக்கு 2 ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி குறுகிய நாட்களில் பல ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி கூட புதிய ரயில்கள் விடப்படுவதில்லை.
அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ள தமிழக மக்கள் பல்வேறு புதிய திட்டங்களையும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
முத்துப்பேட்டைக்கு வருகை வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை, சமூக ஆர்வலர் 'சுனா இனா' என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்கள் சந்தித்து நமதூரை இணைக்கும் திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்த விபரங்களை கேட்டார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட் அல்ல மொக்கை பட்ஜெட். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல வசதிகளைத் திரும்பக் கொண்டுவருவதாகக் கூறுவது அரைவேக்காட்டுத்தனம்.
ReplyDeleteரயிலில் அட்வான்ஸ் புக்கிக் 120 நாளாக உயர்த்தப்படும் - முன்னர் 60 நாட்களாக இருந்ததை 120 நாட்களாக ஆக்கி பிறகு மறுபடியும் 60 ஆக்கினார்கள். அதற்கு காரணம் எஜண்டுகள் 120 நாட்களுக்கு முன்னரே முக்கியமான் வழித்தடங்களில் இருக்கும் பெருவாரியான டிக்கெட்டுகளை புக் செய்து வைத்துக்கொள்வது தான், இனி ஏஜண்டுகளுக்கு கொண்டாட்டம்.
சரி, காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை திட்டம் பற்றி ஒன்னும் இல்லை. அது கனவாக மாறிவிட்டது, ஆம்னி பஸ் நடத்துபவர்களுக்கு யோகம்.
மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதியை பட்ஜெட்டில் சொல்லித்தான் செய்ய வேண்டுமா....? இதெல்லாம் சாதாரண விஷயம். சொல்லும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. இதுல வேற வல்லரசு கனவு.