இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நேர்முக உதவியாளரால் (பொது) கவனிக்கப்படுகிறது.
மாநில அளவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் தொடர்பாக, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், எழிலகம் வளாகம் (இணைப்பு) 4-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரியில் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறும் முகவர்களின் (பதிவு முகவர்கள்) உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ள, தி புரடெக்டர் ஆப் இமிகிரென்ட்ஸ், டி.என்.ஹெச்.பி.காம்ப்ளக்ஸ், அசோக்நகர், சென்னை-600083 என்ற மத்திய அரசின் அலுவலகத்தை நேரிலோ, 044-24891137 என்ற தொலைநகலி எண்ணிலே தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் http://www.poechennai.in/ என்ற இணைய முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத போலி ஏஜென்ட்கள் அதிரையில் அதிகம். பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
ReplyDeleteஅதிரை கிராணி முக்கம் தொடங்கி மீரா மெடிகல் வரை. இந்த இடைப்பட்ட தூரத்தில் ஒரு டிராவல்ஸ் இயங்குது, அங்கு எல்லாம் அரங்கேறுவதாக செய்தகள் வெளியில் கசியத் தொடங்கி விட்டது.