மார்பு, நுரையீரல், வயிறு என ஒன்றோடு ஒன்று ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள லுபோக் (Lubbock) நகரை சேர்ந்த எலிஸ் (Elysse)- ஜான் எரிக்( John Eric) தம்பதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இந்த குழந்தைகளின் வயிறு, மார்பு, நுரையீரல்கள், கல்லீரல், குடல்கள், பெருங்குடல், அடிவயிற்று எழும்பு என ஆகிய உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு இருந்தன.
கெனாட்டலியா ஹோப்(Knatalye Hope) மற்றும் அடிலின் பெய்த் மாட்டா(Adeline Faith Mata) என பெயர்கள் சூட்டி மகிழ்ச்சியில் திளைத்தாலும், பெற்றோர்களால் இச்சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம், குழந்தைகளின் உடல் உறுப்புகளை பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது சிரமம் என்பதால் குழந்தைகள் ஓரளவிற்கு வளரும் வரை அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் குழந்தைகளின் மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் திரவம் போன்ற திசுக்கள் பூசப்பட்டன. இந்த திசுக்கள் குழந்தைகளின் தோலை மென்மையாக்குவதுடன், அதை விரிவடைய செய்வதால் குழந்தைகளை பிரிக்க செய்யும் அறுவை சிகிச்சைக்கு அந்த திசுக்கள் உதவியாக இருக்கும்.
பத்து மாதங்கள் கடந்த நிலையில் அந்த குழந்தைகளுக்கு சமீபத்தில் டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில்(Texas Children's Hospital), 12 அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 6 அனிஸ்த்தீஸ்யா மருத்துவர்கள் மற்றும் 8 அறுவை சிகிச்சைக்குரிய செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு சிகிச்சையில் ஈடுபட்டது.
சுமார் 26 மணி நேரங்களாக நடைபெற்ற இந்த சிகிச்சையில் இரண்டு குழந்தைகளின் மார்பு மற்றும் வயிற்றை பிரித்து உள்ளுறுப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அந்த குழந்தைகளின் தாயார் எலிஸ் கூறியதாவது, எனது குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், ஈடுபாடும் நெகிழ வைத்துள்ளது.
மேலும், எனது குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்த மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற பிரார்த்தனை செய்த அத்தனை நபர்களுக்கும், கண்ணீரால் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என உருக்கமுடன் கூறியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவர் டாரில் கேஸ்(Darrell Cass) கூறுகையில், இதுபோன்ற சிக்கலான உள்ளுறுப்புகளுடன் கூடிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியது மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் முறை.
அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் மாதக்கணக்கில் குழந்தைகளின் உள்ளுறுப்புகள் போல் 3D வடிவில் மாதிரி உறுப்புகளை செய்து அவற்றை எவ்வாறு பிரித்து எடுப்பது உள்ளிட்ட பல பயிற்சிகளை எடுத்ததால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
தற்போது குழந்தைகள் இருவரும் நலமாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்கள் மருத்துவமனையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.