.

Pages

Sunday, February 15, 2015

பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை - தமிழக அரசு

சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள் / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன ? இதுதான் வழிமுறையா ? என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கலீல் அஹமது பாக்கவி கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை என்பதாக தெரியப்படுத்தியுள்ளனர். மேலும் பள்ளி மாணவ மாணவர்களை உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என ஆசிரியை ஆசிரியர்கள் கட்டயப்படுத்தினால் புகார் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.



























தகவல்:குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.