.

Pages

Tuesday, February 24, 2015

குவைத் நாட்டில் பணிபுரிய ஆட்கள் தேவை !

தொலைத்தொடர்புத் துறையின் குவைத் நாட்டு திட்டப் பணிகளுக்கு ஆள்கள் தேவைப்படுகின்றனர் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: 
இந்திய அரசுத் தொலைத்தொடர்புத் துறையின் குவைத் நாட்டு திட்டப் பணிகளுக்குப் பணிபுரிய ஆட்கள் தேவை என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செல்லத்தக்க பாஸ்போர்ட், 50 வயதுக்குள்பட்ட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள் தொடக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் தேவைப்படுகின்றனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்தவர்கள், பட்டயப்படிப்புத் தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகின்றனர். மேலும், குவைத் நாட்டில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். குவைத் நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு 2 ஆண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச விசா, விமானப் பயணச்சீட்டு, இருப்பிடம் ஆகியவை வேலையளிப்போரால் வழங்கப்படும். தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் 2 நகல்கள், வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படம், அசல் பாஸ்போர்டுடன் பிப். 26 முதல் 28 ஆம் தேதி வரை ஏதாவது ஒரு நாளில் எண் 42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, சென்னை 600 032 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு நேரில் கலந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.