இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அவ்வபோது திடீர் விபத்துகளும் ஏற்படுவதுண்டு. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீதிடம் பேசிய வகையில்...
'இந்தப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன. இந்த நான்கு வழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, விபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்' என்றார்.
இவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதை நாம் உணர முடிகிறது. சம்பந்தபட்ட நெடுஞ்சாலை துறையினர் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு வேகத்தடை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.
பள்ளி சார்பாக கலெக்டரிடம் மனு அளித்தும் பலன் இல்லை.
ReplyDelete