சில நாட்களே நகர்ந்தது நீங்கள் காட்டும் அன்பில் நான் உருகினேன் உங்கள் ஸ்பரிசத்தில் மயங்கினேன். உங்களோடே என் பொழுதை முழுமையாய் கழித்தேன் நீங்கள் வெளியே செல்லும்போதல்லாம் நானும் வர அடம் பிடித்தேன் நீங்களும் எந்த மறுப்பும் சொல்லாது வெளியில் அழைத்து செல்வதை வழக்கமாக்கி கொண்டதில் மிகவும் பூரிப்படைந்தேன்.
நீங்கள் இல்லாமல் நானும் இல்லை என்றெண்ணிய பொழுது! அந்த நாள்?!!!இன்றும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது. உங்கள் கண்களில் நீர் கோர்க்க என் அருகில் வந்தமர்ந்தீர்கள் என்னை மலங்க மலங்க பார்த்தீர்கள் நானும் ஒன்றும் புரியாமல் பார்த்தேன் அப்படியே இருக அனைத்துக்கொண்டீர்கள் முதல் முதலாய் அனைத்த அதே இறுகிய அனைப்பு நான் திமிறவில்லை தினறவில்லை அனுபவித்தேன் உங்களது சிகரட், சென்ட் கலந்த வாடை இப்பொழுது எனக்கு பிடித்திருந்தது. உங்கள் கண்ணீர் என் முதுகை நனைக்க உணர்ந்தேன்.
அதுதான் உங்களுக்கும் எனக்கும் நடந்த கடைசி ஸ்பரிசம் உங்களை கொஞ்ச நாளா காணவில்லை எங்கு சென்றீர்கள் ? என்ன ஆனீர்கள் ? யாரிடம் கேட்டாலும் இப்ப வந்திடுவாங்கன்னு சொல்றாங்க ஆனா நீங்க வந்த பாடில்லை உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கி கிடக்கும்...
உங்கள் அன்பு மகள்,
செல்லக்குட்டி ( L.K.G 'B' Sec - ABC Metric School )
( குறிப்பு இந்தியாவில் ஊழியம் செய்யும் என் இனிய நண்பன் என் மகளுக்காக எனக்கு எழுதிய மடல் கண் கலங்கிவிட்டேன் அயலக வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )
ஆக்கங்கள் அடிக்கடி என்பது அருகினாலும் அசத்தல் அமைவுகள்.
ReplyDeleteபடிக்க மனதில் வடுவை வடிக்கிறது. வாழ்த்துக்கள் கூறி விழிகள் அடுத்த வரவை நோக்கி எதிர்பார்க்கிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான ஆக்கம், உறவு சொல்ல ஒருவர் பயணமாகி போய்விட்டார், மீண்டும் அந்த சிகரெட் வாசனையோடு சென்ட் எப்போ மனத்து நிற்கும்?
நெஞ்சை நெகிழ்த்து நெருட வைத்தது.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
நெஞ்சை நெகிழ வைத்தது. அழகிய விழிப்புணர்வு !
ReplyDeleteகொடுமையிலும் கொடுமை குழந்தைகளைப் பிரிவதிலுள்ள கொடுமை; கண்ணீரால் கண்கள் குளமாகின. நீண்ட நாட்களுக்குப்பின்னர் என்றாலும், நீண்டதொரு பாடத்தைச் சொல்லி விட்டீர்கள்; குறுகிய ஆக்கம் என்றாலும் நீண்டதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்; இஃதே எழுத்தின் ஆளுமை!
ReplyDeleteஇதை எழுதும்போதே என் கண்கள் நீரால் ததும்பியது துடைத்துக்கொண்டு தொடர்ந்தேன்
ReplyDeleteஉணர்வு பூர்வமான உணர்ச்சிததும்ப பிஞ்சி உள்ளத்தின் உள்ளன்பை நெஞ்சுகனக்க சுருங்கச் சொன்னாலும் சிறப்புடன் சொல்லிய விதம் அருமை.
ReplyDeleteநண்பன் சபீர் அவர்கள் ஆக்கம் மற்றும் பதிவு அருமை.
ReplyDeleteநான் வெளிநாட்டில் வாழ்தாலும் எனதுமேல் அந்த சிகரட் மற்றும் செண்டு வடைகள் எல்லாம் இராது ...அணைப்புகள் முன்பு பிள்ளைகள் தற்போது பேத்திகள் சொல்லும் .
இதில் அனைத்து வெளிநாடுவாழ் நண்பர்களுக்கும் வீட்டின் Pirme minister கள் உடனான அணைப்புக்கள் தனி என்றே நினைகின்றேன்.
காரணம் கல்யாணம் முடித்து 30 வருஷம் ஆனாலும் பிளைட்டை விட்டு இறங்கியதும் வெளிநாடுவாழ் நாங்களெல்லாம் புதுமாப்பிளைகள் தான் அந்த அனுபவமே தனிதான் .
இப்படி ஒரு இனியநினைவு எல்லோர்
ReplyDeleteவாழ்விலும் இருக்கத்தான் செய்யும்.
அதிரைபுகாரி
இப்படி ஒரு இனியநினைவு எல்லோர்
ReplyDeleteவாழ்விலும் இருக்கத்தான் செய்யும்.
அதிரைபுகாரி