தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் மாணவர்களை உறுப்பினராக சேர்க்கும் பணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று காலை அதிரையில் அமைந்துள்ள கல்லூரி முன்பாக நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். தஞ்சை பாராளுமன்ற தொகுதி இளைஞர் அணி தலைவர் ஜி. பிரபு, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி பொதுச்செயலாளர் செந்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி தலைவர் தர்மராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்றைய முகாமில் ஏராளமான இளைஞர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
அட மாண்வர்களை படிக்க விடுங்கப்பா
ReplyDeleteஅட மாண்வர்களை படிக்க விடுங்கப்பா
ReplyDeleteஸ்ரீரங்கம் தேர்தலின் முடிவு என்னன்னு தெரிந்தும் நீங்க உறுப்பினர் சேர்ப்பது ஆச்சர்யம் தான், தேர்தல் முடிவு பற்றி உங்க தலைவர் ஒரு அறிவிக்கையும் விடமால் இருக்காரு. அடுத்து நாங்க தான் முதலமைச்சருன்னு சொன்னவங்களுக்கு டெபொசிட் போச்சு; உதிரி கட்சிகெல்லாம் யோசிக்க வேண்டிய நேரம்.
ReplyDelete