.

Pages

Tuesday, February 17, 2015

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் உற்சாக கொண்டாட்டம் !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று பிப்ரவரி 17 ல் நாடு முழுதும் கொடியேற்றும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், பேரணி, நலத்திட்ட உதவி வழங்குதல், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது.

இதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி தக்வா பள்ளி அருகே நடைபெற்றது. யூனிட் தலைவர் ரிழா கொடி ஏற்றி வைத்தார்.

முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் தின உரையை தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி ஆற்றினார். இதனை தொடர்ந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஓர் பார்வை' புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை பிஎஃப்ஐ டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாமுதீன் வெளியிட நிஜாம் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து செக்கடி மேடு, சிஎம்பி லேன், பிலால் நகர், ஈசிஆர் ரயில்வே கேட், எம்எஸ் எம் நகர், பிஸ்மி மெடிக்கல்ஸ் அருகே, பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, இந்தியன் வங்கி அருகே, வண்டிபேட்டை, மதுக்கூர் சாலை, ஷிஃபா மருத்துவமனை அருகே உள்ளிட்ட மொத்தம் 13 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, எஸ்டிடியூ உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.