.

Pages

Monday, February 23, 2015

அதிரையில் தர்பூசனி விற்பனை துவங்கியது !

அதிரை சுற்றுவட்டார பகுதியில் இரவில் குளிரும், பகலில் வெயிலுமாக மாறி மாறி சீஷன் இருந்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க அதிரையின் முக்கிய பகுதிகளில் சர்பத் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அதிரை பகுதிகளுக்கு தர்பூசணி பழங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

இதுகுறித்து தக்வா பள்ளி அருகே மொத்தமாகவும், சில்லறையாகவும் தர்பூசணி வியாபாரம் செய்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் நம்மிடம் கூறுகையில்....
'வெயில் சீசன் துவங்கியதை அடுத்து தர்பூசணி வியாபாரத்தை துவங்கியுள்ளோம். கந்தர்வகோட்டையிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் தற்காலிகமாக வியாபாரம் செய்து வருகிறோம். தினமும் 50 முதல் 60 பழங்கள் வரை விற்பனையாகும். ஒரு கிலோ ₹ 12 முதல் ₹ 15 வரை விற்பனை செய்கிறோம். சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம்' என்றார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.