தமிழக கடற்கரை பகுதியில் உள்ள கடற்படை முகாம்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு சென்று மீனவர்கள் பாதுகாப்பு நலன் நாட்டின் எல்லை பாதுகாப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
நேற்று ஆற்காட்டு தோப்புத்துறை, மல்லிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், தொண்டி ஆகிய கடற்கரை முகாம்களுக்குச் சென்று அதிகாரிகளிடம் கூட்டு ரோந்து நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்தார். ஆலோசனை கூட்டத்தில் நாகை மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழுமம், கூடுதல் காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தீபா கர்னிக்கர், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி. பீட்டர் அகஸ்தியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அதிரை கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உதவி ஆய்வாளர் பசுபதி சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கடற்படையும் கடலோர பாதுகாப்பு குழுமமும் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்வது தொடர்பாக கடற்படை முகாம்களுக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றேன்.
சென்ற வருடம் கடலில் இயற்கை இடர்பாடுகள் மற்றும் விபத்தில் சிக்கிய 151 மீனவர்களை காப்பாற்றி உள்ளோம். மீனவர்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து உடன் மீட்க புதிய அதிநவீன படகுகள் விரைவு படகுகள் தமிழக கடற்கரை பகுதிக்கு 20 படகுகள் வழங்க உள்ளோம். நாகை பகுதிக்கு 2 படகுகளும் தஞ்சை பகுதிக்கு 1 படகும் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.