.

Pages

Friday, February 27, 2015

வீடு கட்டியாச்சா !? குடி போயாச்சா !? இந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டை கவனியுங்க.

வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அதற்காக என்னென்ன வேண்டும் எப்படி ஆயத்தப்படுத்தனும் என்று நம்மவர்களுக்கு சொல்லவே தேவை இல்லை.

எல்.கே.ஜி. படிக்கின்ற பிள்ளைகிட்டே போய் எப்படி வீடு கட்டனும் என்று கேட்டால் நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சரியான விளக்கத்தோடு சொல்லும். அந்த அளவுக்கு அறிவு தேர்ந்த கட்டிட நிபுணர்கள் நமதூரில் உண்டு.

வீடு கட்டுவதற்கு மிகவும் முக்கியமான பொருள்களில் மணலும் ஒன்று. இந்த மணல் சுத்தமானதாக இல்லையென்றால் கட்டிடம் உறுதியாக இருக்க முடியாது.  மேலும் மழைக் காலங்களிலும், கச்சாங் காற்று வீசும் நேரங்களிலும் ஒரு மாதிரியான கசிவுகல் ஏற்படுவதை பார்க்கலாம். இந்த மாதிரியான கசிவுகல் தரை, சுவரு, மட்டப்பா, இன்னும் பல இடங்களில் காணலாம், இது உப்புக் கசிவு எனப்படும். மணலில் உப்புத்தன்மை இருந்தால் தான் இப்படி கசிவுகள் உண்டாகும். இது கட்டிடத்திற்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிரைக்கு மேற்கு, வடமேற்கு திசைகளில் இருந்து வரும் மணல்கள் எல்லாம் உப்புத்தன்மை கொண்டவை, இந்த மணல்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் உப்புக் கசிவு உண்டாவதை ஆதாரத்துடன் காட்டமுடியும்.

பல வருடங்களுக்கு முன்பு அதிரைக்கு வடக்கு, வடகிழக்கு பகுதியில் இருந்து வரும் மணல்களில் உப்புத் தன்மை கிடையாது, இவ்வகை மணல்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்னும் உறுதியாகவே இருக்கின்றது. இதையும் ஆதாரத்துடன் காட்டமுடியும்.

கட்டுமானத்திற்காக வாங்கும் பொருள்களின் தரத்தையும் தன்மையையும் யாரும் கவனிபப்து கிடையாது. ஏதோ வேலை முடிஞ்சா சரி, பட்டிப்பார்த்து அப்படியே அழகாக மொழுகி, பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, பார்பதற்கு அழகாக இருந்தால் போதும், தரை ஜில்லென்று இருக்குதா அப்பாடா, இதுவள்ளவோ வீடு என்று பெருமூச்சு விடுவோரும் உண்டு.

மக்களுக்கு என்ன, வீடு நல்ல பெருசா இருக்கணும், கீழும் மேலும் இரண்டு கட்டிடங்களாக இருக்கணும், திரீபேஸ் மின் இணைப்பு இருக்கணும், வண்ண வண்ண கலரில் மை அடித்து இருக்கணும், வீடு முழுக்க மார்பில் போட்டு இருக்கணும், ஆயில் பெயிண்ட் அடித்து இருக்கணும், இப்படி பல விதங்களில் விரும்புகின்றார்கள்.

விரும்புவதில் தப்பு இல்லை, அவர்களின் சக்திக்கு எவ்வளவு உயரம் விரும்ப முடியுமோ, அவ்வளவு உயரத்துக்கு விரும்புவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. விரும்ப உரிமை இருக்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு பெற உரிமை இல்லையே!?

கட்டிடம் கட்டுபவர்கள் எந்த தகுதி வரையில் உறுதி பெற்றவர்கள்?

கட்டிடங்கள் கட்டுவதற்கு வாங்கப்படும் பொருள்களின் தரம் எந்த வகையில் உறுதியானது?

மின் ஒயரிங் எவ்வாறு பிணைத்து இணைக்கப்பட்டுள்ளது?

எர்த், (Ground) எந்த தன்மையில் பொருத்தப்பட்டுள்ளது?

நல்ல நீர், கழிவு நீர் செல்லும் பாதைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

நமதூரில் கட்டும் கட்டிடங்களுக்கு தரச் சான்றுகளின் நிலை என்ன?

இழக்கும் பணத்திற்கு சமமாக கட்டிடத்தின் தன்மைகள் என்ன?

இப்படி யாராவது கட்டிடம் கட்டும் இஞ்சிநீயர்களிடம் கேள்விகளை கேட்டதுண்டா?

இன்னும் இப்படியே கேள்விகளை கேட்டுக்கொண்டே போனால்! நமதூரில் கட்டிடத்தொழில்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். அதே சமயம், இந்த மக்களின் நிலை!! பாதியிலேயே கஞ்சியை வடித்துவிட்டு சாப்பிடும் அரை வேக்காட்டு சோற்றுக்கு சமமானதாக இருக்கின்றது.

அதிரையில் புதியதாக கட்டப்பட்ட பல வீடுகளில் பலதரப்பட்ட குறைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. வெடிப்பு, தரை இறக்கம், கரையான் தொல்லை, தண்ணீர் கசிவு, மின் கசிவு போன்ற இன்னும் பல குளறுபடிகளில் குடித்தனக் காரர்கள் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

வீட்டுக்கு உரிமையாளர்களே, நீங்கள் தகுந்த முறையில் விழிப்புணர்வோடு வீடுகளை கவனித்து கட்டாமல் போவீர்களேயானால், அதில் எவ்வளவு பாடுகள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

வீடுகள் வெளிப்பார்வைக்கு அழகாக காட்சி அளிக்கலாம், ஆனால் சில கேன்சர்களால் உள்ளுக்குள் அரித்துக்கொண்டு இருக்கும்.

இனியாவது விழிப்புணர்வோடு இருங்கள்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com

18 comments:

  1. அனைத்தும் சிந்திக்க வேண்டியவை

    // அதிரைக்கு மேற்கு, வடமேற்கு திசைகளில் இருந்து வரும் மணல்கள் எல்லாம் உப்புத்தன்மை கொண்டவை, இந்த மணல்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் உப்புக் கசிவு உண்டாவதை ஆதாரத்துடன் காட்டமுடியும்.//

    அதிர்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அதிரையில் கட்டுமானப் பணிகள் குண்டக்க மண்டக்க நடக்குது, அதுக்குள்ளே விசா காலாவதியாகி விடும்.

      Delete
  2. இனி புதிதாய் வீடுகட்டுவோர் விழிப்புணர்வுடன் இருக்க நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஊரிலேயா, ம்ஹூம், விழிப்புணர்வோடு இருக்க மாட்டார்களே. எல்லாத்திலேயும் அவசரம்.

      Delete
  3. விழிப்புணர்வு அவ்வப்போது அருமையாகத் தருகிறீர்கள். வீடுக் கட்டுவோர்களுக்கு நல்ல வழிகாட்டல்.

    ReplyDelete
    Replies
    1. என்னத்தே சாதிச்சோம்? இதையாவது செய்யலாமே.

      Delete
  4. பயனுள்ள ஆக்கம் அதுபோல கட்டுமான நுகர்வோர் ஒருங்கிணைப்பும் மிக மிக வசியம் அப்பொழுதுதான் கூலிகளை சரியாக கட்டுப்படுத்தலாம் இதன் மூலம் கட்டிடத்தில்லிருந்து குறிப்பிட தக்க தொகை மீதப்படும்.

    ReplyDelete
    Replies
    1. "கட்டுமான நுகர்வோர் ஒருங்கிணைப்பு"

      பல தடவைகள், பல வகைகளில் ஆலோசித்து முயற்சிக்கப்பட்டது. மக்களின் ஒத்துழைப்பு ZERO%.

      இன்ஷா அல்லாஹ், மீண்டும் வலுவாக முயர்ச்சிக்கப்படும்.

      Delete
    2. ஒன்னும் சொல்ல மனம் வரலையா?

      Delete
  5. புதிய வீடு கட்டபோரீங்களா அல்லது மராமத்து வேலை பார்க்க போறீங்களா? இப்படி தலைப்பு கொடுத்து இருந்தால் பொருத்தமாக இருக்கும். நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க பாராட்டுக்கள் அதே நேரத்தில் வீடு கட்ட, அனுமதிவாங்க பஞ்சாயத்துக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும்?, குறைந்த வட்டியில் எங்கே பணம் கிடைக்கும்? EB க்கு எவ்வளவு commission கொடுக்கணும் இப்படி சொல்லாதது ஏழைகளுக்கு ஏமாற்றமே. மேஸ்திரிக்கும் - கடைக்காரர்க்கும் ஸ்பெஷல் டீல் உண்டு அதப் பற்றி சொல்லாதது ஆச்சரிமாக இருக்கு.

    அந்தக் காலத்தில் (சுதந்திரத்துக் முன் )கட்டிய கட்டிட்டமெல்லாம் இன்னமும் மிளிர்கிறது இப்ப கட்டிய பன்னாட்டு விமான நிலையத்தில் கண்ணாடி ஒவ்வொன்றாக கீழே விழுது. நம்ம ஊர் கட்டிட கலை படித்த மக்கள் வெளிநாட்டில் வேலைப்பார்க்கிறார்கள் இங்கே அனுபவமில்லாதவர்கள் தரமில்லாத பொருகளை வைத்து வீடுகட்டுவதை பார்த்தால் சென்னை மொவ்லிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து இங்கே நடக்கும் என்பது தான் அதிர்ச்சியான ரிப்போர்ட்!!!

    சும்மா கலக்குறீங்க - பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவுதானே!

      ஒரு பட்டியல் தயாரித்து தனியாக ஒரு ஆக்கத்தை உருவாக்கி பதிந்திட வேண்டியதுதான்.

      விரைவில் எதிர்பாருங்கள்.

      Delete
  6. பதிவுக்கு நன்றி! பாராட்டுக்கள்.!!!

    ReplyDelete
    Replies
    1. வெறும் பாராட்டுத்தானா? ஏதாவது ஐடியா உண்டா?

      Delete
  7. ஜமால் காக்கா..!

    அப்படியே முதல் சொந்த வீடு கட்டுபவர்களுக்கு சலுகை விலையில் சொஸைட்டியில் சிமென்ட், அற்றும் அரசு ஒப்புதலுடன் மண் அள்ளிக் கொள்ள கோட்டாவும் இருக்குதாமே..! அந்த விபரங்களையும் சேகரித்து பகிர்ந்து கொண்டால் 'வாயைக்கட்டி வயித்தைகட்டி வீட்டைகட்றவங்களுக்கு' உதவியாயிருக்குமே..!!

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ், விபரங்களை சேகரித்து அடுத்த பதிவில் தரப்படும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.