அதிரை மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது ஒரே மகன் சுரேஷ் ( வயது 29 ) இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். கடந்த 2 ம் தேதி அன்று போனில் தொடர்பு கொண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஊருக்கு வருவதாக கூறியிருக்கிறார். அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் கடந்த 15 ம் தேதி எனது மகன் பேசிய போனில் தொடர்பு கொண்டோம். அப்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனது மகன் மற்றும் திருச்சியை சேர்ந்த அவரது நண்பர் இறந்துவிட்டதாக கூறினர். எப்படி இறந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனவே எனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteசௌதி அரேபியாவில் உள்ள தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி மகனை இழந்து துயரத்தில் இருக்கும் பெற்றோருக்கு உதவலாம், இறைவன் நற்கூலி தருவான்.