.

Pages

Friday, February 20, 2015

முத்துப்பேட்டையில் அமைதி நிலவியது: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல் !

முத்துப்பேட்டையில் கடந்த 31.12.14 அன்று நடந்த சம்பவம் குறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பேசியதாவது:–

முத்துப்பேட்டையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின்போது இந்துக்கள் சிலர், ஷேக் தாவூத் தர்கா வழியாகச் சென்றபோது, கோஷங்களை எழுப்பியதால் அங்கிருந்த முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தெரு விளக்குகள் சேதப்படுத்தப்பட்டன. சில அடையாளம் தெரியாத நபர்களால் அங்குள்ள மற்றொரு தர்காவின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டது. காவல் துறையினர், உடனடியாகத் தலையிட்டு இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாவண்ணம் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

காவல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.