.

Pages

Wednesday, February 18, 2015

பொண்டாட்டிக்காக 147 முறை இரத்தம் தானம் செய்த கணவர் !

சீனாவின் வட கிழக்கு ஜிலின் மாகாணம் அருகே வசிப்பவர் க்சூ வென்வூ. இவரது மனைவி வாங் க்சியோயிங். கடந்த 2003 ஆம் ஆண்டு தனது கணவரின் கண்ணெதிரே திடீரென கீழே விழுந்தார் மனைவி வாங். உடனடியாக தன் மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்றார் வென்வூ. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வாங்க்கு ரத்த சோகை நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் வாங்கின் கை செயலிழந்தது. இரும்பு சத்து குறைவால் ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் உருவாக்கும் தகுதியை அவரது உடல் இழந்ததுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி ரத்தத்தை மாற்றினால் தான் அவரால் தொடர்ந்து உயிர் பிழைத்து இருக்க  முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.

மனைவிக்காக தனது ரத்தத்தை தர முன் வந்தார் வென்வூ. ஆனால் வென்வூவின் ரத்த வகையும், வாங்கின் ரத்தவகையும் வெவ்வேறாக இருந்தது. சீன நாட்டு சட்டப்படி தனது உறவினர்களுக்கு இலவசமாக ரத்த தானம் பெற, தனது ரத்தத்தை ஒருவர் தானம் செய்யவேண்டும் . இச் சட்டப்படி கணவர்  வென்வூ கடந்த 10 வருடங்களில் 147 முறை ரத்த தானம் செய்துள்ளார் . ஒரு வருடத்துக்கு சராசரியாக 15 முறை ரத்த தானம் செய்துள்ளார் . ஆண்டுக்கு 4 முறை மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை போல் 4 மடங்கு ரத்தத்தை தானம் செய்துள்ளார் வென்வூ. தான் ரத்த தானம் செய்வது குறித்து வென்வூ கூறுகையில், நான் ஒன்றே ஒன்றை தான் விரும்புவதாக தெரிவித்த அவர் தங்களது வாழ்நாள் முடியும் வரை, தனது மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதே விருப்பம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இத்தம்பதிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் சோகத்துடன் தான் வாழ்ந்து வந்துள்ளனர். சோதனை மேல் சோதனையாக மனைவி வாங் உயிருக்கு ஆபத்தாக ரத்த சோகை நோய் இடி போல வந்திறங்கியது. மேலும் வாங்கின் கணவர் கூறுகையில்  தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதால் அவரது உடல்நிலையும் பலவீனமடைந்து வருவதாக குறிப்பிட்டார். எனினும் அவர்  உயிருடன் இருக்கும் வரை அவரது மனைவியின் உயிருக்காக தொடர்ந்து ரத்த தானம் செய்து கொண்டே இருக்கப் போவதாக உறுதிபட தெரிவித்துள்ளார் க்சூ வென்வூ என்னும் அற்புத கணவர்.
 

1 comment:

  1. நம்ம தமிழ்நாட்டு புருஷனா இருந்தால் தனக்கு ரத்தத்தில் கண்டம் என்று சொல்லி பொண்டாட்டியை மாத்திருப்பான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.