.

Pages

Sunday, February 22, 2015

வித்தியாசமாக நடந்த நூல் வெளியீட்டு விழா !

பிரபல வலைப்பதிவரும், இணையதள எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தா மற்றும் உதவி இயக்குநருமான அரசர்குளத்தான் என்ற ரஹீம் கஸாலி எழுதிய 'கஸாலித்துவம்' என்ற நூலின் வெளியீட்டு விழா
அண்மையில் அறந்தாங்கி தாலுகா அரசர்குளத்தில் நடைபெற்றது.
       
திரைப்பட துறையில் வளர்ந்து வரும் உதவி இயக்குநரான ரஹீம் கஸாலி பிரபலமான வலைப்பதிவர் ஆவார். பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், தமிழகத்தின் பிரபலமான தினசரிகள் மற்றும் வார, மாத இதழ்களிலும், பல்வேறு இலக்கிய இதழ்களிலும், கூட்டங்களிலும் தான் பேசிய, எழுதிய விசயங்களை தொகுத்து, கஸாலித்துவம் என்ற தனது முதலாவது நூலை வெளியிட்டுள்ளார். இவர் தனது படைப்புகளின் இறுதியில் த்துவம் என குறிப்பிடுவது வழக்கம். உதாரணமாக முயற்சி என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் இறுதியில் #முயற்சித்துவம் என்று குறிப்பிடுவது வழக்கம். அதையே தனது நூலுக்கும் கஸாலித்துவம் என பெயர் சூட்டியுள்ளார்.
   
இந்த நூலுக்கு பிரபல திரைப்பட இயக்குநர்கள் கே.பாக்யராஜ், முரளி அப்பாஸ், எழுத்தாளர் சுரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். எழுத்தாளர் ரஹீம் கஸாலி 1993 முதல் அரசியல், சமூகம், சினிமா, நாட்டுநடப்புகள், புத்தக விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் தனது பதிவில் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
         
இவர் தனது நூலை வித்தியாசமான முறையில் வெளியிட தீர்மானித்து, தனது மகன் ரிஸால் அகமதுவின் ஐந்தாவது பிறந்த நாளில் அவர் மகன் வெளியிட, மற்றொரு இணையதள பிரபல எழுத்தாளர் என்.கே.எஸ்.ஹாஜா மைதீன் என்பவரின் நான்கு வயது மகன் ரமீன் ராஜா பெற்றுக்கொண்டார்.
       
நூல் வெளியீட்டு விழாவில் வலைப்பதிவர்கள் அஜ்மல்கான், அஜீம் இஸான், அபுல் கலாம் ஆசாத், செல்லா.செந்தமிழ்ச்செல்வன், கரு.ஆசை செந்தில், தமுஎகச பேராவூரணி கிளைச் செயலாளர் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்: 
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.

1 comment:

  1. தன் ஆற்றல், படைப்புகள், சுயசரிதைகள் எல்லாவற்றையும் தொகுப்பாக தொகுத்து பிரபலங்கள் மூலம் வெளியிடுவதைப் பார்த்த நமக்கு வித்தியாச முறையில் நூல்களை குட்டீஸ் பெற்றுக்கொண்டதும் ஒரு வித்தியாசத்துவம். எப்போ அரசர்குளத்தான் என்ற படத்தை, வித்தியாச முறையில் எடுக்கப் போறீங்க?- வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.