பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய இளைஞர் தின வாலிபால் போட்டி 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் முத்துவேலு தலைமை வகித்தார்.
பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜ மாணிக்கம் வரவேற்றார். அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மஹபூப் அலி, துவரங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் வாழ்த்தினர்.
முதலிடம் பிடித்த அதிரை காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, இரண்டாமிடம் பிடித்த அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு கல்லூரி முதல்வர் முத்துவேலு, மூன்றாமிடம் பிடித்த ஒரத்தநாடு சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நான்காமிடம் பிடித்த பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ராஜன் தொகுத்து வழங்கினார். தேசிய மாணவர்படை அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.
படங்கள் உதவி: காலித் அஹமது

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.