விழுப்புரத்தில் இருந்து ஏராளமான வாத்து வியாபாரிகள் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக செக்கடி மேடு, தக்வா பள்ளி, மேலத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்று வாத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பார்வையில் படும்படி வாத்துகளை மேய விட்டுள்ளனர். இப்பகுதியினர் ஆர்வத்துடன் வாத்துகளை வாங்கிச்செல்கின்றனர். சிலர் தமது தோட்டங்களில் வளர்ப்பதற்காகவும் வாங்குகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த வாத்து வியாபாரி கண்ணன் கூறியதாவது...
'கோடை காலம் துவங்கியதை அடுத்து வாத்து விற்பனையை துவங்கியுள்ளோம். இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாத்துக்களை வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி வாத்து ₹ 200 க்கு விற்பனை செய்கிறோம்' என்றார்.
This comment has been removed by the author.
ReplyDeleteமிளகு கறி போட்டு பெரட்டினமாதிரி ஆணம் குழம்பு வைத்து சுட சுட புரட்டா கூடவே இடியப்பம்... இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடுக்கு ம்ம்ம் அந்தமாதிரி இருக்கும் .
ReplyDeleteBird flu-மறக்க வேண்டாம்.
Deleteஎந்த மாதிரி
ReplyDelete