இதுகுறித்து மனைபிரிவின் உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில்...
எங்கள் மனைப்பிரிவு ஈசிஆர் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 அடியில் பிரதான சாலை அமைக்கப்பட்டுள்ளது. மனை பகுதியில் மின் இணைப்பு வசதியும், கழிவு நீர், வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த மனைகளே உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். மனைகளை முன் பதிவு செய்து உடன் பத்திரப்பதிவு செய்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க இருக்கிறோம்' என்றனர்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
தமிழ்நாட்டில் நிறைய விளை நிலங்கள் மலடாக்கி விலை நிலங்களாக மாற அந்த அந்த பகுதி பஞ்சாயத்து தலைவர்கள்தான் முக்கிய காரணம்.அவர்களுக்கு எது விளை நிலம் எது விலை நிலம் என்று நன்றாக தெரியும்.அதற்க்கு தகுந்த மாதிரி நிலம் விற்பவர்களிடம் இருந்து 15 முதல் 25 சதவீதம் வரை பணத்தை பெற்று விட்டு அதை வீட்டு நிலமாக ஒப்புதல் கொடுத்து விடுகின்றார்கள். பிறகு சொத்து பதிவு, அங்கேயும் இந்த கதிதான். எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.தெரிந்தும் பணம் கிடைத்தால் போதும் என்று அதை பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்.அடிமட்டம் திருந்தினால்தான் மேல்மட்டம் திருந்தும்.இனி வருங்கால சந்ததிகளுக்கு நெல்,உளுந்து,பயறு வகைகள் கீரைகள் எல்லாம் தாவரவியல் பூங்காவில் வைத்துதான் காட்ட முடியும்.
ReplyDeleteகிராமங்களின் வயல்வெளிகள் எல்லாம் இப்பொது வீட்டுமனைகளாய் ஆகி நல்ல காற்றோட்டம் இல்லாமலும்,நிலத்தடி நீர் பற்றாக்குறை ஆகிகொண்டிருக்கின்றன. இப்போ இயற்கையாக உற்பத்தி செய்த உணவு பொருட்கள் உண்ணாததாலும்,உடல் உழைப்பு இல்லாததாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்து மாத்ரைகளை உண்டு வாழ்கிறார்கள்.வயல்வெளி சுருங்க,சுருங்க மனிதன் ஆரோக்கியமும் சுருங்குது .
நம் கண்ணுக்கு எட்டிய விவசாய நிலங்கள் எல்லாம் பிளாட் ..பிளாட்.... அரசு கட்டுப்படுத்துமா என்பது பலரது கேள்வி.
உங்களுடைய தொழில் சிறக்க வாழ்த்துக்கள். ரோட்டின் அகலம் பதினாறு அடி போதாது, இருபது அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் இது ஒரு புறம்போக்கு நிலம், அந்தக் காலத்திலேயே வளைத்து போட்ட நிலம், இந்த மனையை வாங்குவோர் மேலும் பக்கத்து நிலங்களை வளைத்துபோட சான்ஸ் உண்டு.
ReplyDeleteபூமியில் வளைத்துப் போட்டால். நாளைக்கு ஆகிரத்தில் உங்களுடைய அமல்கள் வளைத்து போடப்படும்.
மறுமை பயன் இருந்தால்! திருந்த பாருங்கள்.
Rombe thanks ungalin ariuraikku
Deleteஉங்களுடைய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete