ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையை பேரழிவை ஏற்படுத்தக்கூடிய புயல் ஒன்று தாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையை மார்சியா(Marcia) என்ற புயல் தாக்கியுள்ளது.
இதனால் கடுமையான காற்று வீசுவதுடன், பெரும் மழையும் பொழிந்து வருகிறது. கடலில் உயரமான அலைகளும் எழுவதால், கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் வெளியேறி வருகின்றனர்.
மேலும் லாம்(Lam) என்றொரு புயலும் வட மாகாணத்தைத் தாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் கூரைகள் பிய்த்து எறியப்பட்டிருப்பதாகவும் மரங்கள் பிடுங்கி எறியப்பட்டிருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் அனஸ்டேசியா பாலசுக்(Annastacia Palaszczuk) கூறுகையில், இந்த புயலால் யாருக்கும் காயம் ஏதும் இல்லை என்றாலும், வீடுகள் சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் லிவிங்ஸ்டோன், யெப்போன்(Yeppoon) பகுதியில் 33 ஆயிரம் பேரும், ராகாம்ப்டனில்(Rockhampton) 20,000 பேரும் மின்சாரமின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகத் தீவிரமான புயல் என்று இதனைக் குறிப்பிட்டிருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், "உயிரிழப்பின்றி இதைக் கடந்துவிட முடியும் என நம்புவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.