மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இன்று காலை வரை ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஊர் திரும்பாததால் இவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
மகன் காணாமல் போனது குறித்து ஜமால் முஹம்மது தகப்பனார் முஹம்மது இஸ்மாயில் நம்மிடம் கவலையுடன் கூறுகையில்...
'நான் கடைதெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனை காணவில்லை. பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகிறோம். இதுவரையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனது மகன் ஆலிம் பட்டம் பெற்றவன். எனது மகன் விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் துஆ செய்யுங்கள்' என்றார்.
இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
பட்டுக் கோட்டை நகரில் கண்காணிப்பு காமரா பொருத்தப் பட்டுள்ளதாக சொன்னார்கள் அதில் Trace பன்னினால கொஞ்சம் துப்பு கிடைக்கும். முயற்சிபண்ணி பாருங்கள். வீடு திரும்ப துவா செய்வோம்.
ReplyDelete