.

Pages

Friday, February 20, 2015

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்துப்பேட்டையில் கந்தூரி விழா !

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் சேக்தாவூது தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் 713-வது கந்தூரி விழா இன்று 20-02-2015 மாலை துவங்கியது. தர்ஹாவிலிருந்து ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டு முத்துப்பேட்டையின் முக்கிய வீதியில் வலம் வந்தது.

இதைதொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்ஹா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலி பேகம், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் தலைமையில் போலீஸார் செய்திருந்தனர். விழாவில் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியினர் கலந்துகொண்டனர்.

களத்திலிருந்து 'மணிச்சுடர்' சாகுல் ஹமீது 

6 comments:

  1. 2015 இன்னும் திருந்தவில்லையா? நரக நெருப்புக்கு அஞ்சி கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. விநாயகர் சதுர்த்திக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் புகைப்படத்தில்?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துபவர்கள் கூட மக்ரிப் தொழுகைக்கு மரியாதை கொடுத்து மக்ரிப் நேரம் தங்களது ஊர்வலத்தை நிறுத்தி வைத்துவிட்டுத் தொடருகிறார்கள். ஆனால் இந்த ஊர்வலக் கூட்டம் சரியாக மக்ரிபுக்கு பாங்கு சொல்லும் நேரத்தில் ஆசாத் நகர் பள்ளியைக் கடந்து சென்றது. பாங்குக்கு நிறுத்தப்படவில்லை. மேளம் தாளம் பாட்டுக் கச்சேரி குதிரை ஆட்டம் தொடர்ந்தது. அதையும் தொடர்ந்து ஊர்வலம் திரும்பும் வேளையில் இஷாவுடைய பாங்குக்குக்கும் இதே மரியாதைதான் தரப்பட்டது.
    அல்லாஹ் இவர்களுக்கு எப்போது நல்ல புத்தியை கொடுப்பானோ?
    இறைநேசர்களின் பெயரில் இப்படி ஒரு அநாகரிகக் கூத்து. ADT தனது கிளையை முத்துப் பேட்டை யில் தொடங்குமா?

    ReplyDelete
  5. இப்பதான் புரிகிறது ஏன் இந்த ஊரில் அடிக்கடி ஹிந்து முஸ்லிம் சண்டை நடக்கின்றது என்று.
    எங்கள் கூத்தும் கும்மாளம் பெருசா அல்லது உங்கள் ஆட்டம் பாட்டம் பெருசா என்று மாறி மாறி
    பறை சாட்டுவதால் தான் என்று.

    ReplyDelete
  6. இப்பதான் புரிகிறது ஏன் இந்த ஊரில் அடிக்கடி ஹிந்து முஸ்லிம் சண்டை நடக்கின்றது என்று.
    எங்கள் கூத்தும் கும்மாளம் பெருசா அல்லது உங்கள் ஆட்டம் பாட்டம் பெருசா என்று மாறி மாறி
    பறை சாட்டுவதால் தான் என்று.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.