.

Pages

Tuesday, February 24, 2015

வழக்கிலிருந்து ஜெ விடுதலையாக வேண்டி தாடி வளர்க்கும் வார்டு கவுன்சிலர் !

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெறவும், மீண்டும் முதலமைச்சராக வேண்டியும் பால்குடம், மண்சோறு, தீச்சட்டி உச்சகட்டமாக சிலுவையில் அறைந்து கொள்வது உள்ளிட்ட வழிபாடுகள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இதில் அதிமுக இளைஞர் அணியின் அதிரை நகர செயலாளரும், அதிரை பேரூராட்சியின் 3 வது வார்டு உறுப்பினரும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான சிவக்குமார் கடந்த சில மாதங்களாக தாடி வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து சிவக்குமார் நம்மிடம் கூறுகையில்...
'நான் சிறு வயது முதல் அதிமுகவின் தொண்டர். மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் தீவிர விசுவாசி. பொய்யாக போடப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழக முதலமைச்சாராக மீண்டும் அம்மா வருவார். இந்த வேண்டுதல் நிறைவேற தொடர்ந்து தாடி வளர்த்து வருகிறேன்' என்றார்.

3 comments:

  1. இறைவனிடம் மனிதன் வேண்டுதல் வைக்கும்போது அதில் எல்லாவற்றையும் இறைவன் அருளியதில்லை.
    அநியாங்களும் அரசியல் பழிவாங்கலும் அடியேன் மட்டுமின்றி யாராலும் ஏற்றுகொள்ளபடுவதில்லை.
    அவைகள் களையப்படவேண்டும் இருப்பினும்

    ஒரு வேலை ஜெயலலிதாவின் வழக்கு வெற்றிபெறாமல் போனால் அதிகம் தாடி வளர்த்து அதில் உலக சாதனை புரிந்தவரும் நமது சகோதரர் சிவகுமார் தான் என்றால் அதில் மாற்று கருத்தில்லை .

    ReplyDelete
  2. கராத்தே வீரர் ஹீசைனி தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு .பின் போட்டோகிராபர்கள் எல்லோரும் படம் எடுத்துவிட்டார்களா? என்பதை நிச்சயம் செய்து கொண்ட உடனேயே ஆணியை பிடுங்கி விட்டு ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

    மக்கள் முதல்வரும் இப்படியெல்லாம் இனி செய்யக்கூடாது என்று மனம் இளகி கடிதம் கொடுத்துள்ளார். சிவக்குமார் அண்ணனுக்கு மக்கள் முதல்வரிடமிருந்து கடிதம் வருமா?

    ReplyDelete
  3. இவனுக்க எல்லாம் பெற்ற தாயிக்கு இப்படி நேர்த்தி கடன் இருந்திருப்பார்களா? ஒருக்காலும் இருந்திருக்கவே மாட்டார்கள். இந்த தற்காலிக தாயிக்கு இப்படி வேஷம் போட்டால்தானே காரியத்தை சாதிக்க முடியும். இதை எல்லாம் இந்த தற்காலிக தாயிக்கு தெரியுமோ?

    இப்படி புதுசு புதுசா வேஷங்களை கோஷங்களோடு அள்ளி வீசினால் இன்னும் நிறைய ஒயின் ஷாப்புகளை திறக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.