.

Pages

Wednesday, February 18, 2015

முத்துப்பேட்டையில் கல்லூரி மாணவி திடீர் மாயம் !

முத்துப்பேட்டை வீரன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி மகள் இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். கடந்த 9-ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரது பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாணவியின் தாயார் சீதா லெட்சுமி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

செய்தி: 'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

2 comments:

  1. மனைவி மிஸ்ஸிங் ஆனாலும், மாணவி மிஸ்ஸிங் ஆனாலும், அந்த ஏரியாவில் எவனாவது மிஸ்ஸிங் ஆகிருக்கானான்று ஆராய வேண்டும். பொறவு, காதல் துறை காவல் துறை அது இதுன்னு போகணும்.

    இந்தக்காலத்துலே, எந்தப்புள்ளே ஒழுங்கா படிக்குது? எல்லா புள்ளைல்வலும் காதல் கத்தரிக்காவை தேடிக்கிட்டே போகுது.

    ReplyDelete
  2. மாணவர்களை சீரப்பளிப்பது சமூக வலைதளங்கள் தான், எல்லா கருமங்களும் அங்க தான் நடக்குது. நேரத்துக்கு எழுந்திரு, வேல வேளைக்கு சாப்பிடு , நல்லா படி, வேலைக்கு போனா சீக்கிரம்மா வீடு திரும்பு இப்படி பிள்ளைக்கு பெற்றோர்கள் அறிவுரை சொன்னா " பிள்ளைகளின் (மாணவர்களின் )சுதந்திரத்தை ஏன் பெற்றோர்கள் குறுக்கிடுகிறீர்கள் என்று தனியார் தொலைக்காட்சி நடத்துபவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் போல் கேட்கிறார்கள். பெற்றோர்களை அவர்கள் குற்றவாளிகள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள்.

    அவர்களுக்கு வேண்டுமானால் அது Live Programme ஆக இருக்கலாம் நமக்கு Life என்பதை பெற்றோர்கள் மறக்க வேண்டாம். மீடியாவால் சமூகம் சீரழிகிறது என்பதை மர்ப்பதிற்க்கில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.