.

Pages

Thursday, February 26, 2015

செக்கடி குளம் புனரமைப்பின் இறுதி வடிவம் ! [ படங்கள் இணைப்பு ]

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குளத்தை சுற்றி காணப்படும் மேடுகளை அகலப்படுத்தி பாதுகாப்பான முறையில் நடை மேடை அமைக்கவும், நடைமேடையின் பக்கவாட்டில் புற்களை அமைத்து நவீனப்படுத்தி, நடை மேடையின் இருபுறமும் செடிகள், மரங்கள் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு ஒவ்வொரு பணிகளாக நடைபெற்று வந்தது.

செக்கடி குளத்தின் வடமேற்கு பகுதியில் காணப்படும் நடைமேடையிலிருந்து மணல் சரிந்து வாய்க்காலில் புகுந்து அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக 3 அடி அகலமுள்ள சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது. இதைதொடர்ந்து பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புற்களை செக்கடி குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள  நடைமேடையின் பக்கவாட்டு பகுதியில் புதைக்கும் பணி நடந்தது. இதையடுத்து மண் சரிவை தடுக்க குளத்தில் காணப்படும் நான்கு திசைகளின் உட்புறத்திலும் சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது.

அதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையாலும், ஆற்று நீர் வருகையாலும் சில வாரங்கள் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து சிறிது இடைவெளியில் குளத்தின் புனரமைப்பு பணி மீண்டும் சூடு பிடித்தது. குளத்தின் நான்கு திசைகளிலும் காணப்படும் நடை மேடையில் 10 அடி அகலத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக்கடி குளத்தின் இறுதி வடிவத்தின் மாதிரி புகைப்படங்கள் நமதூர் செக்கடி பள்ளியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிடும் அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செக்கடி குளத்தின் இதுவரை நடைபெற்று வந்த பணிகளின் புகைப்படங்கள்...
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.