.

Pages

Tuesday, February 24, 2015

அதிரை பகுதியில் நெற்பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள்!

அதிரை அருகே அலையாத்தி காடு உள்ளது. இந்த காடு கர்சகாடு, முடுக்கு காடு, வன்னிபுலகாடு, கருங்குளம், மரலகாடு, மஞ்சவயல் ஆகிய கிராமம் உள்ளது. இந்த பகுதி கடைமடை பகுதி என்பதால் தற்போது இங்கு நெல் பயிரிடப்பட்டு இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது.

இந்த நிலையில் அலையாத்தி காட்டு பகுதியில் இருந்து காட்டு பன்றி விவசாயம் செய்யும் இடத்துக்கு வந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காட்டு பன்றியிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரத்தில் கண்விழித்து காவல் காக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி சுப்பையன் கூறியதாவது...
நாங்கள் இருக்கும் பகுதி கடைமடை பகுதி என்பதால் தற்போதுதான் விவசாயம் நடைபெற்று வருகிறது. இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை நாசப்படுத்துகிறது.

இதனால் நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் வயல் பகுதியில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே வனத்துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க விவசாயிகள் வயல் பகுதியில் கூடாரம் அமைத்துள்ள காட்சி 

1 comment:

  1. விவசாயத்தின் அருமை தெரியாதலால்தான் நாம் அவர்களுக்காக போராடுவதில்லை .நாம் நினைத்து கொள்கிறோம் அவர்கள் செய்யும் தொழில் மற்ற தொழிலைப் போன்று என்று அவர்களுக்கு நஷ்ட்டம் ஏற்ப்பட்டால் நமக்கு என்ன வென்று .அவர்கள் இரவு பகலாக விளித்து இருந்து பயிர்களை விவசாயம் செய்யாவினில் நம் வீட்டு பானையில் சோறுக்கு பகரமாக மொபைல்,டேப்,லேப்டாப் போன்றவற்றை நொறுக்கி சமைத்து சாப்பிடவேண்டியதுதான் .


    நெய்னா முஹம்மத் @ ரியாத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.