.

Pages

Saturday, February 28, 2015

மேலத்தெருவின் பிரதான பகுதியில் புதிதாக மணிக்கூண்டு திறப்பு !

அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேலத்தெரு பகுதியில் மகிழங்கோட்டை செல்லும் பிரதான சாலையின் முக்கத்தில் புதிதாக மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இப்பகுதி தன்னார்வ இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

3 comments:

  1. ஒரு காலத்தில் கடிகாரம் என்பது ஆடம்பர பொருளாக இருந்தது. மக்கள் சூரியனை அண்ணாந்து பார்த்து நேரத்தை தெரிந்து கொண்டனர். இதனால் அரசாங்கமே மணிக்கூண்டு என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் இதை அமைக்க தொடங்கியது. பின் சங்கு சத்தம் என்ற ஒலியை ஏற்படுத்தி மணித்துளிகளை மக்கள் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ கடிகாரம் அணியாத மக்களே இல்லை என்ற நிலை..! அது மட்டுமல்ல இன்று விஞ்சானத்தின் உச்ச கட்டத்தில் நாம் இருக்கின்றோம். ஆளாளுக்கு மொபைல் போன் என்றாகிவிட்டது. எல்லா மொபைல் போனிலும் கடிகாரம் அலாரம் சகிதமாக வைத்துக்கொண்டு இருகின்ற காலத்தில் " மறுபடியும் மணிக்கூண்டா........?"

    ஆர்வ கோளாறில் வைத்துள்ள இந்த மணிக்கூண்டு காலப்போக்கில் பராமரிப்பு இன்றி விடப்படும். இது உண்மை. எனவே இது போன்று வீண் விரயம் செய்வதை விட இந்த தொகையை ஏதாவது ஒரு ஏழையின் கல்விக்கோ, மருத்துவ செலவிற்கோ கொடுத்தால் பயன் அளித்தது இருக்கும். தியா இதுபோன்ற உதவியை செய்து வந்தாலும் இந்த தொகையை அதுபோலவே செலவிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  2. ஜும்மா பள்ளியின் கேட் மேலே நடுவில் அமைந்திருந்த கடிகாரம் நீண்ட காலமாக நமது தெரு வாசிகளுக்கு மணி பார்ப்பதற்கு பயன்பட்டு வந்தது கடைதெருவில் இருந்து கீழதெரு அருகே வரும்போதே ஜும்மா பள்ளியின் கடிகாரதில் மணி தெரியும் பள்ளி புணரமைப்பின் போது அது மாற்றம் செய்யப்பட்டுவிட்டது .....அது போல் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ள கடிகாரம் தஞ்சை to பட்டுக்கோட்டை சாலையில் ஆலடிக்குமுனையில் அமைந்துள்ள்ளது .இரவு நேரத்தில் தஞ்சையில் இருந்து வரும்போது அலடிகுமுணையில் நான் மணி பார்க்க தவறியதே இல்லை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.