.

Pages

Wednesday, February 25, 2015

பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் செய்த நூதன போராட்டம் !

முத்துப்பேட்டை பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் குடியிருப்புகளை சமீபத்தில் பேரூராட்சி நிர்வாகம் அகற்ற உத்தரவு போட்டது, அதனால் துப்பரவு பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் சமரச பேச்சால் அவர்கள் பணிக்கு திரும்பி வேலை பார்த்து வந்தாலும் அவர்கள் சரிவர பணிகள் மேற்கொள்ளாததால் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீப காலமாக குப்பைகளை அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது, இதனால் நகர் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. பல இடங்களில் நீண்ட நாட்களாக குப்பைகளுடன் கழிவுகளும் கொட்டி கிடப்பதால் பலவகை துர்நாற்றம் வீசி வருவதுடன் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் 6-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை என்றும், குப்பைகள் அகற்ற துப்புரவு பணியாளர்களை அப்பகுதி தி.மு.க கவுன்சிலர் ஜெய்புநிஷா அனுப்ப கோரியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க கவுன்சிலர் ஜெய்புநிஷாவின் கணவர் பகுருதீன், நேற்று காலை பேரூராட்சி அலுவலம் சென்றவர் அங்கே யாரும் இல்லாததால் அங்கே இருந்த பேரூராட்சியின் குப்பைகள் சேகரிக்கும் தள்ளு வண்டியை எடுத்து தானே தனது வார்டு பகுதிக்கு தள்ளி வந்தார். பின்னர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நீயூ பஜார், புதுத்தெரு, பள்ளிவாசல் மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் வீடு வீடாக சென்று தள்ளு வண்டியில் குப்பைகளை சேகரித்தார். பின்னர் பல நாட்களாக அல்லப்படாத சாலையோர குப்பைகளை பெருக்கி கையால் அள்ளி சுத்தம் செய்தார். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் இதனை கூட்டமாக கூடி வேடிக்கை பார்த்தனர்.

இதுகுறித்து தி.மு.க கவுன்சிலர் ஜெயபு நிஷாவின் கணவர் பகுருதீன் கூறுகையில்... 
எனது பகுதியில் தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும் என தினமும் பேரூராட்சி அலுவலகம் சென்று நாய் போன்று அலைந்து கெஞ்சி வருகிறேன். இதனை பெரிதாகவே நினைக்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலச்சிய படுத்துகிறது அதனால் எனக்கு வேறு வழி தெரியலை அதனால் நானே அகற்றி வருகிறேன், இது தொடரும் என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.