அழகான அரண்மனைகள், பேரழகுடன் காட்சியளிக்கும் அழகிய தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கத்தை கண்முன்னே நிறுத்துகிறது 'இஸ்தான்புல்'.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பெரிய கண்டங்களை இணைக்கும் இயற்கையான பாலம் போல இஸ்தான்புல் அமைந்துள்ளதால், உலகமெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அந்தக்கால ஆடை, ஆபரணங்கள், ஓட்டோமென் மற்றும் இஸ்லாமியக் கலைப் பொருட்கள், பீங்கானிலான அலங்கார உபயோகப் பொருள்கள் ஆகியவை இன்றும் காட்சியளிக்கின்றன.
பாஸ்பரஸ் ஜலசந்தியின் கரையில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் உள்ள அழகிய தோட்டங்கள் கோடை மற்றும் வசந்த காலங்களில் பேரழகுடன் காட்சியளிப்பவை.
அற்புதமான கிரேக்க, ரோமானிய, எகிப்திய, துருக்கிய சிலைகள், கலைப் பொருட்கள், வழிபாட்டுத் தலங்களின் பகுதிகள், வேலைப்பாடுகள் நிறைந்த கல்லால் ஆன சவப்பெட்டிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராணுவ அருங்காட்சியகத்தில் ஓட்டோமன் கால பீரங்கிகள், போர்த் தளவாடங்கள், ராணுவச் சீருடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ரோம சாம்ராஜ்ய வல்லமையையும் செழிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
பிரமிக்க வைக்கும் கட்டடக் கலைத்திறனுடன் அமைந்த இந்த ஆலயம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயமாகத் திகழ்ந்தது.
புனித சேவியர் தேவாலயம்: இதன் சுவர்களிலும், கூரையிலும் இயேசுநாதரின் மரணம், அவர் மீண்டும் உயிர்த்தெழுதல் பற்றிய அழகிய பல சித்திரங்கள் காணப்படுகின்றன.
எப்போதும் இங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு தரை விரிப்புகள், அணிகலன்கள், தோல் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பலவும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்கின்றன.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பெரிய கண்டங்களை இணைக்கும் இயற்கையான பாலம் போல இஸ்தான்புல் அமைந்துள்ளதால், உலகமெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தோப் கபி அரண்மனை ( Topkapi Palace )
ஓட்டோமன் ஆட்சியின் சின்னமாக விளங்கும் தோப் கபி அரண்மனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ வேண்டிய இடங்களில் மிக முக்கியமானதாகும்.அந்தக்கால ஆடை, ஆபரணங்கள், ஓட்டோமென் மற்றும் இஸ்லாமியக் கலைப் பொருட்கள், பீங்கானிலான அலங்கார உபயோகப் பொருள்கள் ஆகியவை இன்றும் காட்சியளிக்கின்றன.
தோல்மஹபஸ் அரண்மனை ( Dolmabahce Palace )
19-ஆம் நூற்றாண்டில் தோல்மஹபஸ் அரண்மனை சுல்தானின் மற்றொரு இருப்பிடமாக விளங்கியது.பாஸ்பரஸ் ஜலசந்தியின் கரையில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் உள்ள அழகிய தோட்டங்கள் கோடை மற்றும் வசந்த காலங்களில் பேரழகுடன் காட்சியளிப்பவை.
ருமெலி கோட்டை( Rumelian Castle )
ஓட்டோமன் மன்னர்களால் இஸ்தான்புல் கடல் பிரதேசத்தைக் காப்பதற்காக ருமெலி கோட்டை கட்டப்பட்டது. பெரிய பீரங்கிகள் பல, இந்தக் கோட்டையையும் நகரத்தையும் கடல்வழி எதிரிகளிடமிருந்து காத்துள்ளன.
அருங்காட்சியகம்( Museum )
இஸ்தான்புல்லில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. பல அரிய பண்டைக்காலப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.அற்புதமான கிரேக்க, ரோமானிய, எகிப்திய, துருக்கிய சிலைகள், கலைப் பொருட்கள், வழிபாட்டுத் தலங்களின் பகுதிகள், வேலைப்பாடுகள் நிறைந்த கல்லால் ஆன சவப்பெட்டிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராணுவ அருங்காட்சியகத்தில் ஓட்டோமன் கால பீரங்கிகள், போர்த் தளவாடங்கள், ராணுவச் சீருடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஹகியா சோபியா ( Hagia Sophia )
ரோமானிய மன்னர் கான்ஸ்டான்டினால் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் புனித ஞான தேவாலயம் என்றழைக்கப்படுகிறது.ரோம சாம்ராஜ்ய வல்லமையையும் செழிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
பிரமிக்க வைக்கும் கட்டடக் கலைத்திறனுடன் அமைந்த இந்த ஆலயம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயமாகத் திகழ்ந்தது.
புனித சேவியர் தேவாலயம்: இதன் சுவர்களிலும், கூரையிலும் இயேசுநாதரின் மரணம், அவர் மீண்டும் உயிர்த்தெழுதல் பற்றிய அழகிய பல சித்திரங்கள் காணப்படுகின்றன.
மசூதிகள் ( Mosques )
இஸ்தான்புல் நகரத்தை "மசூதிகளின் நகரம்” என்று கூறலாம். துருக்கிய கட்டடக் கலை வல்லுநரான மிமார்சினான் என்பவரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சுலைமானியா மசூதி” மிகவும் வனப்பு மிகுந்ததாகும்.
வணிக வளாகம் ( Grand Bazaar )
உலகின் மிகப் பெரியதாகக் கருதப்படும் கட்டட அமைப்பில் ஒன்று. இஸ்தான்புல் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமையானது. இங்கு 65 கடைவீதிகள் உள்ளன. பல நூற்றாண்டுக் காலமாக வணிகர்கள் வணிகம் செய்யும் இடமாக இது திகழ்கிறது.எப்போதும் இங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு தரை விரிப்புகள், அணிகலன்கள், தோல் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பலவும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்கின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.